அலற விடும் யோகி பாபு! கூட்டம் கூட்டமாக வரிசையில் நிற்கும் இயக்குனர்கள்

yogibabu tamilactor
By Edward Mar 13, 2022 08:30 AM GMT
Report

சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் நடிப்பர்கள் எல்லாம் முன்னணி இடத்திற்கு வருவது என்பது சுலபமில்லா விஷயம். அப்படி வில்லன்களுடன் வரும் அடியாளாக நடித்து வந்தவர் யோகிபாபு. சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த யோகி தன் திறமையால் நல்ல வரவேற்பு பெற்று தற்போது லட்சத்தில் சம்பளம் வாங்கும் காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர்.

கூர்கா, மண்டேலா போன்ற திரைப்படங்கள் அவரை சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. அது மட்டுமல்லாமல் ரசிகர்களிடம் தனி மதிப்பையும் பெற்றுக் கொடுத்து வருகிறது. காமெடியனாகவும் சோலோ நடிகராகவும் திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், நிறைய பேர் இவரை அணுகி காமெடியனாகவும், ஹீரோவாகவும் நடிப்பதற்கு நிறைய கதைகளை கூறியிருக்கிறார்கள். அதில் முக்கால்வாசி பேர் யோகிபாபுவுக்கு தெரிந்தவர்கள் மற்றும் அவருடைய கஷ்ட காலத்தில் உதவியவர்கள் என்ற காரணத்தால் யோகி பாபு அவர்களிடம் கதையை கேட்டு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

அதோடு படத்தை தயாரிப்பதற்கு ப்ரொடியூசரோடு வாருங்கள் என்றும் கூறியிருக்கிறார். இதனால் யோகிபாபுவின் கால்ஷூட் வைத்துக் கொண்டு 50 பேர் கொண்ட குழு கோடம்பாக்கத்தை சுற்றி வருகிறார்களாம்.