வடிவேலுவை தொடர்ந்து தலைக்கனத்தில் ஆடும் யோகிபாபு!! ரெட் கார்ட்-க்கு அச்சாணி போடும் சம்பவம்

Vadivelu Yogi Babu
By Edward Mar 14, 2023 06:33 AM GMT
Report

சினிமாவில் முன்னணி நடிகர்கள் உச்சத்தில் இருப்பதால் சில விசயங்களை செய்து சர்ச்சையிலும் சிக்குவார்கள். அப்படி நடிகர் வடிவேலு சில ஆண்டுகளுக்கு முன் சிலருடன் பிரச்சனை செய்ததால் சினிமாவில் நடிக்க தடை விதித்து ரெட் கார்ட் போடப்பட்டது.

அதன்பின் 4 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டுதான் ரெட் கார்ட் நீக்கப்பட்டு பிரச்சனை எல்லாமே சுமுகமாக முடிந்து நடிக்க ஆரம்பித்தார். ஆனால் மீண்டும் சந்திரமுகி 2 வில் தன் வேலையை காமித்திருக்கிறார்.

அதாவது படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வராமல் இழுத்தடித்து வருவதால் இயக்குனர் பி வாசு வடிவேலு மீது கடும்கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியது.

வடிவேலுவை தொடர்ந்து தலைக்கனத்தில் ஆடும் யோகிபாபு!! ரெட் கார்ட்-க்கு அச்சாணி போடும் சம்பவம் | Yogi Babu Follow Vadivelu Attitute In Movie Shoot

இந்நிலையில் வடிவேலுவின் அந்த தலைக்கனத்தை தற்போது ஒரு நாளைக்கு லட்சத்தில் சம்பளம் வாங்கும் நடிகர் யோகி பாபுவும் பின்பற்றி வருகிறாராம். 9 மணிக்கு கால்ஷீட் கொடுத்து 12 மணிக்கு தான் வடிவேலு படப்பிடிப்புக்கு வருவார்.

அவரைபோல் யோகிபாபுவும் திருநெல்வேலியில் நடக்கும் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்கு, 9 மணிக்கு கால்ஷீட்டிற்கு 11.30 மணிக்கு வந்து ஒரு மணிநேரம் கழித்து பிரேக் என்று எடுத்துக்கொள்கிறாராம்.

மொத்தமே 4 மணி நேரம் தான் அதிகபட்சமாக நடிப்பதால் தயாரிப்பாளர் கடும் கோபத்தில் இருக்கிறாராம். உச்சத்தை அடைந்து தலைக்கனத்தில் ஆடினால் ரெட் கார்ட் தான் கொடுப்பார் என்று பலர் யோகி பாபுவை விமர்சித்து வருகிறார்கள்.