சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் யோகிபாபுவின் அண்ணனா இது? கோவில் பூசாரியா?
தமிழ் சினிமாவில் பல இன்னல்கள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வந்தவர் நடிகர் யோகிபாபு. சில வருடங்களுக்கு முன் சினிமாவில் வாய்ப்பிற்காக சிறு கதாபாத்திரத்தில் நடித்தால் போதும் என்று நடிக்க ஆரம்பித்த யோகிபாபு, தற்போது ஒரு நாளை பல லட்சம் சம்பாதிக்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார்.
சந்தானம், சூரி, சதீஷ் போன்ற காமெடி நடிகர்களையே தூக்கி எறிந்து இவர் படத்தில் இருந்தாலே காமெடி அல்லும் என்றளவிற்கு இவரது புகழ் இருக்கிறது. இப்படியொரு உயரத்தில் இருக்கும் யோகிபாபுவின் அண்ணன் பற்றிய புகைப்படங்கள் செய்திகள் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த யோகிபாபு அண்ணன் சக்தி யோகி ராஜா ஆன்மீகத்தொண்டு செய்து வருகிறாராம். வராகி அம்மனின் தீவிர பக்தராக இருந்து அந்த கோயிலின் வளாகத்திலேயே அருள்வாக்கு சொல்லியும் வருகிறாராம்.
எனக்கு சினிமாவில் ஈடுபாடு எங்கள் குடும்பம் கலைக்குடும்பம் தான். அதனால் தான் யோகிபாபுவை நடிக்க அனுப்பி வைத்தோம் என்று சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார் சக்தி யோகி ராஜா.