பிரபல காமெடி நடிகருக்கு அட்வைஸ் கொடுத்தது தலையா? மறக்க முடியாத நினைவு என அவரே வெளியிட்ட கருத்து!

ajith yogibabu valimai tamilcinema
By Edward Apr 17, 2021 08:01 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் குறைந்து விட்டார்கள். படத்திற்கேற்ப காமெடி வசனங்கள் பட ஹீரோக்களுக்கு முக்கியமான ஒன்றாக அமைந்து வருகிறது. அதை சிறப்பாக செய்து வருகிறார் நடிகர் யோகிபாபு.

பல கஷ்டங்களை தாண்டி முன்னணி காமெடி நடிகர் என்ற பெயரை பெற்று பல விருதுகளை பெற்று வருகிறார். முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்த யோகிபாபு தற்போது நடிகர் அஜித்தின் வலிமை படத்திலும் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு கொரானா லாக்டவுனால் தாமதமானதை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் மொத்தமாக முடிவுற உள்ளது.

ஆனால் அதற்கு வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் படப்பிடிப்புகள் நடந்தவாறு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் அஜித் பற்றி அன்பாக கூறி வருவதை தொடர்ந்து, தல அஜித்துக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவர்களை கூப்பிட்டு அவர்களுக்கு என்ன உதவி வேண்டும் என்பதை கேட்பதும், வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் குறித்து பேசுவார் என்று நடிகர் யோகிபாபு கூறியுள்ளாராம்.

கடந்த வருடம் யோகிபாபு திருமணத்திற்கு பிறகு தல அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது தல அஜித் யோகிபாபுவுக்கு அழைத்து, சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட குடும்பம் ரொம்ப முக்கியம் என்ற வார்த்தையை கூறினாராம்.

அதைக் கேட்ட பிறகு குடும்பத்திற்கு பிறகுதான் அனைத்தும் என்பதை உணர்ந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.