நான்கே சீன் தான் இருக்கு.. கோபத்தில் இப்படியொரு விளம்பரம் செய்த நடிகர் யோகிபாபு?

Yogi Babu Viral Photos
By Edward Jul 14, 2022 01:40 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராகவும் அதிக சம்பளம் வாங்குபவராக திகழ்ந்து வருபவர் நடிகை யோகிபாபு. பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வரும் யோகிபாபு கதாநாயகனாக ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்தவகையில் நடிகர் நிதின் சத்யா ஹீரோவாக நடிக்கும் தாதா என்ற படத்திலும் நடித்துள்ளார். அப்படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படம் யோகிபாபு துப்பாக்கி ஏந்தியபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த யோகிபாபு 4 காட்சிகள் மட்டும் இந்த படத்தில் நடித்துள்ளேன்.

நிதின் சத்யா தான் ஹீரோ. தயவுசெய்து இதைப்போன்று விளம்பரம் செய்யாதீர்கள் என்று எச்சரிக்கையாக கருத்தினை போட்டு படத்தினை விளம்பரம் செய்திருக்கிறார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலானதை தொடர்ந்து நிதின் சத்யா அவரது டிவிட்டர் பக்கத்தில் ஒரு நண்பனை விட்டுக்கொடுக்காம ரசிகர்களையும் விட்டுக்கொடுக்காம அந்த மனசு தான் என்று பாராட்டி பதிவினை பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் இப்படியும் ஒரு விளம்பரம் செய்யலாம் என்று கலாய்த்து வருகிறார்கள்.