3 - 6 மாசம் தான் உயிரோடு இருப்பேன்னு சொன்னாங்க!! கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் எமோஷனல்..
யுவராஜ் சிங்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று தற்போது பல வீரர்களுக்கு பயிற்சியாளராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து மீண்டு வந்தது குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில், என்னுடைய நுறையீரல் மற்றும் இதத்துக்கு இடையே இருந்த கட்டி, நரம்பு மண்டலத்தை அழுத்தியது. அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் உங்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்புள்ளது என்றும் 3 முதல் 6 மாதங்கள் மட்டுமே உயிரோடு இருப்பீர்கள் என்றும் மருத்துவர்கள் கூறினார்கள்.
அந்த சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 வருடங்கள் கழித்து விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. அதற்கிடைப்பட்ட காலங்களில் சுமார் 40 போட்டிகளில் நான் 12வது வீரராக இருந்தேன். அப்படி காத்திருந்த எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனாலும் அப்போது அமெரிக்காவுக்கு அறுவை சிகிச்சை செல்வதை தவிர்த்து எனக்கு வேறு வழியில்லை. மருத்துவமனையில் டாக்டர். என் ஹார்ன் என்னிடம், இங்கிருந்து நீங்கள் புற்றுநோய் இல்லாத ஒரு மனிதராக வெளியே போவீர்கள் என்று சொன்னது எனக்கு பலத்தை கொடுத்தது.
கடைசியில் அனைத்து தெளிவும் வந்து மீண்டும் கிரிக்கெட்டில் விளையாடலாமா என்று நினைத்தபோது அது 2வது வாழ்க்கைப் போலத்தான் தோன்றியது. மீண்டும் விளையாடுவது சாத்தியமல்ல என்று உலகம் சொன்னபோது, நான் அதை நிரூபித்துக் காட்ட விரும்பினேன் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார் யுவராஜ் சிங்.