தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு இடையில் மாட்டித்தவிக்கும் நடிகர்!! சிக்கி சின்னாபின்னமாகி புலம்பும் நிலை..

Dhanush Vishnu Vishal Aishwarya Rajinikanth
By Edward Apr 03, 2023 06:54 PM GMT
Report

முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை 18 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரிவதாக கூறியிருந்தார்.

அதன்பின் பல விதமான கருத்துக்களை இணையத்தில் அவர்கள் பற்றி பேசுபொருளாக மாறியது. இதனை கண்டுகொள்ளாமல் இருவரும் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வந்தனர். தற்போது ஐஸ்வர்யா லால் சலாம் என்ற படத்தினை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் முக்கிய ரோலில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தினை தொடர்ந்து தனுஷ் இயக்கும் ஒரு படத்திலும் விஷ்ணுவிஷால் நடிக்கவுள்ளார்.

இதனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்திற்கு கேட்ட கால்ஷீட் தேதியிலேயே நடிகர் தனுஷும் கேட்டுள்ளாராம்.

இருவரும் ஒரே நாளில் கால்ஷீட் கேட்பதால் என்ன செய்வது என்று முழித்து வருகிறாராம். தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு இடையில் சிக்கிக்கொண்டேனே என்றூ இடையில் மாட்டிக்கொண்டு புலம்பி வருகிறாராம் விஷ்ணு விஷால்.