அஜித்துக்கு ஓகே.. விஜய்க்கு நோ சொல்லி ஒதுக்கிய 22 நடிகை..

Ajith Kumar Vijay Greatest of All Time Sreeleela
By Edward Apr 28, 2024 02:30 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித், துணிவு படத்தினை தொடர்ந்து இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பல ஆண்டுகள் கழித்து நடிகை திரிஷா நடித்து வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி என்ற படத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.

தனுஷின் விவாகரத்து நாடகம்.. உடந்தையாக ஐஸ்வர்யா!! ரஜினிகாந்த் வீட்டில் நடப்பது இதுதான்..

தனுஷின் விவாகரத்து நாடகம்.. உடந்தையாக ஐஸ்வர்யா!! ரஜினிகாந்த் வீட்டில் நடப்பது இதுதான்..

இப்படத்தில் யார் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில், 22 வயது நடிகை முக்கிய ரோலில் நடிக்கவிருப்பதாக செய்திகள் பரவியது. தெலுங்கு சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் புகழ் பெற்று பிரபலமான நடிகை ஸ்ரீலீலா தான் அஜித் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இப்படியொரு பேச்சு எழுந்து வந்த நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போடவும் நடிகை ஸ்ரீலீலாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றதாம்.

அஜித்துக்கு ஓகே.. விஜய்க்கு நோ சொல்லி ஒதுக்கிய 22 நடிகை.. | Young Actress Says No To Vijay Goat Ok For Ajith

குத்து பாடலுக்கு நடனமாட வாய்ப்பு வந்த நிலையில், தான் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமாக போகிறோம், அது குத்து பாடல் மூலமாக வேண்டாம். கதாநாயகியாகவே என்ட்ரி கொடுக்கலாம் என முடிவு செய்து, விஜய் படத்திற்கு நோ கூறிவிட்டாராம். தற்போது இந்த தகவல் பெரியளவில் இணையத்தில் பரவி விஜய் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Gallery