பொய் பேசலாம்.. ஆன ஏக்கர் கணக்குல பேச கூடாது: வீடியோவை சிரிக்காம பாருங்க

Beast
By Parthiban.A May 15, 2022 02:30 PM GMT
Report

விஜய்யின் பீஸ்ட் படம் கடந்த ஏப்ரலில் ரிலீஸ் ஆகி மோசமான விமர்சனங்களை சந்தித்து படுமோசமான வசூலை பெற்றது. போட்ட காசாவது திரும்ப வந்ததா என்பது சன் பிக்சர்ஸுக்கே வெளிச்சம். ஆனால் படம் சூப்பர்ஹிட் என ரிலீஸ் செய்த உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். தற்போது செய்தியே ஒரு பிரபல youtube சேனலில் வரும் மூன்று பேர் பற்றியது தான். அவர்கள் பீஸ்ட் படம் ஷூட்டிங்கில் இருந்த நேரத்தில் அதில் தங்கச்சி சென்டிமென்ட் அதிகம் இருக்கும் என பேசி இருக்கின்றனர். ஆனால் அது பொய் என்பது பீஸ்ட் படம் பார்த்த பிறகு தான் தெரியவந்தது.

அவர்கள் பேசிய அந்த வீடியோவை தற்போது நெட்டிசன்கள் எடுத்து மீமாக மாற்றி கலாய்த்து இருக்கின்றனர். 'பொய் சொல்லலாம்.. ஆனா ஏக்கர் கணக்குல பேச கூடாது' என அவர்களை கிண்டல் செய்து இருக்கின்றனர்.