3 மில்லியன் சப்ஸ்கிரைப்பருக்கு ஆப்பு? மண்டையை பிய்த்துக்கொண்டு புலம்பித்தள்ளிய யூடியூபர்
இளைஞர்கள் மத்தியில் சமுவலைத்தளங்கள் முக்கிய பங்கினை வகித்து வருகிறது. அதிலும், யூடியூப் மிகப்பெரிய அளவில் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை இருக்கும் அனைத்து தரப்பு வயதினருக்கும் மிகந்த பயனாக அமைந்து வருகிறது.
சமையல், சினிமா, அரசியல் உள்ளிட்ட பல அத்யாயங்களை கொண்டு யூடியூப் சேனல்களை பலர் உருவாக்கி வருகிறார்கள். அதில் சாப்பாட்டு சம்பந்தமான யூடியூப் சேனலை ஆரம்பித்து உருவாக்கி நடத்தி வந்தவர் யூடியூபர் இர்பான்.
30 லட்சம் சப்ஸ்கிரைபர்களை வைத்து கொண்டு சம்பாதித்து வரும் இர்பானின் சேனல் நேற்று முடக்கப்பட்டது. இதற்கு என்ன காரணம் என்று புலம்பி வந்த இர்பான் நொந்துப்போனவர் போல் ஆகினார்.
தற்போது 16 மணிநேரம் கழித்து யூடியூப் நிறுவனம் அவரின் சேனலினை மீட்டு கொடுத்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து இர்பான் வீடியோவினை வெளியிட்டுள்ளார். பைத்தியம் பிடித்ததை போல் மனநிலையில் இருந்த இர்பானுக்கு பலர் ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.