படுக்கைக்கு 15 லட்சம் வரை பேரம் பேசிய இயக்குனர்.. உண்மையை உடைத்த நடிகை ஜனனி

Youtube Indian Actress
By Edward Aug 18, 2022 01:22 PM GMT
Report

யூடியூப் சேனல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் ஜனனி. நரிக்கூட்டம் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமான ஜனனி தன் காதல் பற்றியும் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் அனுபவத்தை பற்றியும் பகிர்ந்துள்ளார். ஒரு பையன் என் மொபைல் போன் வாங்கி பேசிய அடுத்த நாளில் கத்தியுடன் வந்து பிரபோஸ் செய்து மிரட்டினான். கையை அறுத்துக்காத கழுத்தை அறுத்துக்கோ என்று கூறினேன்.

அதன்பின் வேறொரு ரிலேஷன்ஷிஃப்பில் இருக்கிறான் என்று கூறியுள்ளார். மேலும், வெல்கம் கேல்ஸ் வேலையை செய்யும் போது சில ஆடிஷன் சென்றிருக்கிறேன். சத்யா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் ஒல்லியாக இருக்கிறேன் என்ற காரணத்தால் ஒதுக்கி விட்டார் என்றும் கூறியுள்ளார்.

படுக்கைக்கு 15 லட்சம் வரை பேரம் பேசிய இயக்குனர்.. உண்மையை உடைத்த நடிகை ஜனனி | Youtuber Janani Open Up Her Bodyshame Adjustment

என் வாழ்க்கையில் நிறையமுறை ஆடிஷன் நடந்து காஸ்ட்டிங் கவுச் நடந்துள்ளது. எல்லாம் முடிந்து ஓகே ஆனதும் ரெண்டு பேருடன் (நடிகர், தயாரிப்பாளர்) அட்ஜெஸ்மெண்ட் இருக்கும் அதை பண்ணணும். அதற்கு ஓகே சொல்லவில்லை என்றால் காசு கொடுக்கிறோம் என்று கூறி ஆசைக்காட்டினார்கள்.

ஒரு படத்தில் 3 லட்சம் ஆரம்பித்து 15 லட்சம் வரை பேரம் பேசி அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கூப்பிட்டார்கள். என்னால் முடியாது என்று கூறியதும், தோழிகளை சிபாரிசு செய்யுங்கள் என்று இயக்குனர்கள் பலர் கூறியுள்ளார்கள்.

என்னை மீறி என் திறமைக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் உடலுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார் ஜனனி. மேலும் கேரவனின் இயக்குனர் என் மீது கையை போட்டார். எனக்கு தெரிந்த நடிகர் நண்பர் என்பதால் அவரிடம் சென்று பிரச்சனை ஏற்படுத்தினேன் என்று கூறியுள்ளார் நடிகை ஜனனி.