அஜித்தை மதிக்காத யுவன் ! இதுவரை செஞ்சது எல்லாம் போதும்..
நடிகர் அஜித், எச் வினோத், போனி கபூர் காம்பினேஷனில் மிகப்பெரியளவில் வெளியாகவுள்ளது வலிமை படம். 3 ஆண்டுகளாக ரசிகர்களின் காத்திருப்பிற்கு அஜித் இப்படத்தின் மூலம் தீர்த்து வைக்கவுள்ளார். படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் டிக்கெட்டுக்கள் அனைத்து தியேட்டர்களிலும் விற்பனை செய்து ஹவுஸ் ஃபுல்-லாகியுள்ளது என்ற தகவலும் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் வலிமை படத்தின் இசையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு அது இன்று வரை தீராத சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. படத்தின் பாடலை மட்டும் யுவன் சங்கராஜா இசையமைத்துள்ளார்.
மற்ற அனைத்து வேலைகளுக்கும் ஜிப்ரான் தான் இசை அமைத்துள்ளார். இதற்கு காரணம் வலிமை படத்தின் பிஜிஎம் இயக்குனர் எச் வினோதிற்கு பிடிக்கவில்லை என்ற காரணமும் கூறப்பட்டது.
அந்த கோபத்தில் இன்று வரை படத்தின் வெளியீடு பற்றி எதையும் கண்டுக்கொள்ளாமல் இருந்து வருகிறார் யுவன் சங்க ராஜா. படத்தில் டிரைலர் வெளியீடு, படம் ரிலீஸ் அறிவிப்பிற்கு மட்டுமே டிவிட்டரில் பதிவிட்ட யுவன், வலிமை படம் வெளியாகப்போகும் நேரத்தில் எந்த டிவிட்டும் போடாமல் அஜித்தை அவமதித்து வருகிறாராம்.
இதற்கு முழு காரணமாக இருப்பது, அஜித்தின் ஏகே61 படத்தில், எச் வினோத்-போனி கபூர் கூட்டணி ஜிப்ரானை கமிட் செய்து யுவனை ஒதுக்கியது தான் அதன் காரணம் என்று தெரிய வந்துள்ளது.