கல்யாணத்திக்கு அப்பா இளையராஜா வராததுக்கு இதான் காரணம்!! யுவன் சங்கர் ராஜா ஓபன் டாக்...
யுவன் சங்கர் ராஜா
முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் யுவன் சங்கராஜா தன்னுடைய திருமணத்திற்கு அப்பா இளையராஜா வராததற்கு காரணம் என்ன என்று பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில், என் திருமணம் திடீரென நடந்தது, ஊருக்கு போயிருந்தேன். அடுத்தநாள் கல்யாணம் என்பதால் என் அப்பாவுக்கு போன் செய்து, அப்பா எனக்கு நாளை திருமணம் என்று கூறினேன்.
இளையராஜா வராததுக்கு
அதற்கு அப்பா, நான் அங்கு வருவேன், ஒன்றும் பிரச்சனையில்லை, அப்படி நான் வந்தால் மத்தவர்களுக்கு awkward-ஆக இருக்கும். நான் அதை விரும்பவில்லை. நீ திருமணம் செய்துகொண்டு என்னை வந்து பார் என்று கூறினார்.
பின் திருமணம் முடித்துக்கொண்டு அப்பாவை பார்க்க சென்றோம். நான் வேறு மதத்திற்கு மாறுகிறேன் என என் தந்தையிடம் சொன்னது, மற்ற அப்பாக்கள், மதம் மாறக்கூடாது என நமக்கு எதிராக பேசுவார்கள். ஆனால் என் அப்பா எதிர்க்கவில்லை. என்னை புரிந்து கொண்டார்.
இதை எதிர்த்தவர்களிடம் கூட, அவன்(யுவன்) அஞ்சி
வேளை தொழுகை செய்ய நினைக்கிறான், இதில் என்ன
இருக்கு, அவனை அவன் இஷ்டத்திற்கு விடுங்க என்று
தந்தை இளையராஜா கூறியதாக யுவன் சங்கர் ராஜா
தெரிவித்துள்ளார்.