2019ல் தோனி, விராட் செய்த காரியம்!! வெளிப்படையாக பேசிய யுவராஜ் சிங்...
யுவராஜ் சிங்
இந்திய அணியில் தன்னுடைய முக்கிய பங்கினை ஆற்றி வந்தவர் தான் முன்னால் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். 2017க்கு பின் இந்திய அணியில் இருந்து ஒதுக்கப்பட்ட யுவராஜ் சிங், 2011ல் நடந்த உலக கோப்பை தொடரில் மிகப்பெரிய பங்கினை ஆற்றி வெற்றிக்கு வழிவகுத்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் யுவராஜ் சிங், எம் எஸ் தோனி மற்றும் விராட் கோலி பற்றி பேசிய விஷயம் தற்போது திரும்பி பார்க்கப்பட்டு வருகிறது.
தோனி, விராட்
அதில் யுவராஜ் சிங், இந்திய அணிக்கு மீண்டும் நான் திரும்பியபோது விராட் எனக்கு ஆதரவளித்தார். அவர் என்னை ஆதரிக்கவில்லை என்றால் நான் இந்திய அணிக்குள் இருந்திருக்க மாட்டேன். நான் உள்நாட்டு கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக செயல்பட்டேன். ஆனால் 2019ல் ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணியின் உண்மை நிலை என்ன என்பதை தோனி எனக்கு தெளிவாக காட்டினார்.
தேர்வாளர்கள் உங்கள் விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை என்பதை தோனி எனக்கு நன்றாக எடுத்துரைத்தார். அவரால் தனக்கு முடிந்ததை செய்தார். ஒரு கேப்டனாக எல்லோரையும் நியாயப்படுத்த முடியாது. அது கங்குலி மற்றும் பாண்டிங் என யாராக இருந்தாலும் சரி, ஆதரிப்பதும் ஆதரிக்காமல் போவதும் அவரவரது தனிப்பட்ட விருப்பம். தோனி தன்னால் முடிந்ததை எனக்கு செய்தார் என்று யுவராஜ் சிங் பகிர்ந்துள்ளார்.