திருமணமாகி 4 வருடத்தில் விவாகரத்தா!! யுவேந்திர சாஹல் மனைவி நடவடிக்கை தான் காரணமா?
யுவேந்திர சாஹல்
கடந்த ஆண்டு முதல் பல விவாகரத்து செய்திகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டும் இது தொடர்கிறது. கடந்த ஆண்டு ஹார்திக் பாண்டியா தனது மனைவியை பிரிவதாக அறிவித்தார்.
மேலும் ஒரு கிரிக்கெட் வீரர் தன்னுடைய மனைவியை திருமணம் செய்த 4 ஆண்டுகளில் பிரியவுள்ளாராம். அது யாரும் இல்லை இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்துவீரர் யுவேந்திர சாஹல் தானாம்.
கடந்த 2020 டிசம்பர் 22 ஆம் தேதி யூடியூபர், நடன இயக்குநர் மற்றும் பல் மருத்துவரான தன்ஸ்ரீ வர்மாவை யுவேந்திர சாஹல் திருமணம் செய்து கொண்டார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வந்த தன் மனைவியை 4 ஆண்டுகளுக்கு பின் இன்ஸ்டாகிராமில் இருந்து அன்ஃபாலோ செய்துள்ளார் யுவேந்திர சாஹல்.
ஆண் நண்பர்களுடன் நெருக்கம்
இந்நிலையில் இதுகுறித்து சமூகவலைத்தளங்களில், தனஸ்ரீ வர்மா திருமணத்திற்கு பின் தனது நடன வீடியோக்களை பகிர்வதும் ஆண் நண்பர்களுடன் இணைந்து நடனமாடியும் அவர்களுடன் நெருக்கமாக இருந்தது போன்ற புகைப்படங்கள் வெளியாகியதும் தான் விவாகரத்துக்கு காரணம் என்று கூறப்பட்டு வந்தது.
திருமணத்திற்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடன இயக்குநர் பிரதிக் உத்தேகருடன் காதலில் இருந்ததாகவும் அவருடன் அப்போது எடுத்த புகைப்படங்கள் இப்போது பகிரப்பட்டு வருவதுதான் விவாகரத்துக்கு காரணம் என்று கூறி வருகிறார்கள்.