கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: குற்றத்தை ஒப்புக்கொண்ட சாமுண்டீஸ்வரி.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்!
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ‘கார்த்திகை தீபம்’. அடுத்தடுத்து விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரில், இன்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரிக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் உண்மையை ஒப்புக்கொண்ட சாமுண்டீஸ்வரி!
இன்றைய எபிசோடின் தொடக்கத்தில் சாமுண்டீஸ்வரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போது கோயிலில் இருந்த இரண்டு நேரில் பார்த்த சாட்சிகள், ஸ்ரேயாவை சாமுண்டீஸ்வரி துப்பாக்கியால் சுட்டதைத் தாங்கள் பார்த்ததாக நீதிபதியிடம் கூறுகின்றனர். இதைத் தொடர்ந்து சாமுண்டீஸ்வரியும், ஸ்ரேயாவைத் துப்பாக்கியால் சுட்டது நான்தான் என்று தனது குற்றத்தை ஒப்புக்கொள்கிறார். இதனால் நீதிபதி சாமுண்டீஸ்வரியைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைக் கேட்டு குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் உறைந்து போகின்றனர்.
சந்திரகலா, சிவனாண்டியிடம் ஆவேசப்பட்ட தினேஷ்!
இதற்கிடையில் கார்த்திக், மயில்வாகனம் மற்றும் தினேஷ் ஆகிய மூவரும் சந்திரகலா, சிவனாண்டியை நேரில் சந்திக்கின்றனர். அப்போது கோபமடைந்த தினேஷ், "என்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் என் அக்காவின் உடலை யாரைக் கேட்டு தகனம் செய்தீர்கள்? அவளுக்கு சொந்தக்காரனான நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். எங்கும் ஓடிப் போய்விடவில்லை. அப்படி இருக்கும்போது, வேண்டுமென்றே நீங்கள் செய்த இந்தக் காரியம் ரொம்பத் தவறு" என்று இருவரிடமும் ஆவேசமாகக் கேள்வி கேட்கிறார். ஆனால், சந்திரகலாவும் சிவனாண்டியும் வழக்கம்போல தினேஷின் கேள்விகளுக்கு நக்கலாகப் பதில் சொல்லி சமாளிக்கின்றனர். ஏற்கனவே இறுதிச் சடங்குகள் முடிந்துவிட்டதால், இனிமேல் இதைப் பற்றிப் பேசி எந்தப் பயனும் இல்லை என்று நினைக்கும் கார்த்திக், மயில்வாகனம் மற்றும் தினேஷ் அங்கிருந்து கிளம்புகின்றனர்.

தாலி பிரித்து கோர்க்கும் வைபவத்திற்குத் தயாராகும் குடும்பத்தினர்!
மறுபக்கம், தான் சிறைக்குச் சென்றாலும் சுவாதிக்குத் தாலி பிரித்து கோர்க்கும் வைபவம் எந்தத் தடையும் இல்லாமல் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று சாமுண்டீஸ்வரி குடும்பத்தினரிடம் உறுதியாகச் சொல்லியிருக்கிறார். இதனால் வேறு வழியில்லாமல் குடும்பத்தினரும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்குகின்றனர். இதற்காக ஜோசியரை வீட்டிற்கு அழைத்து வந்து நல்ல நேரம் பார்க்கின்றனர். அவரும் வைபவத்திற்கான சுபமுகூர்த்த நேரத்தைக் குறித்துக் கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.