சின்னத்திரையில் நடக்கும் பாலியல் அத்துமீறல்!.புட்டு புட்டு வைக்கும் சீதா ராமன் சீரியல் நடிகை

Serials Tamil TV Serials
By Dhiviyarajan Aug 31, 2023 12:45 PM GMT
Report

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் சீரியலில் நடித்து வந்தவர் தான் நடிகை பிரியங்கா. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு அவர் சீரியலில் இருந்து விலக, அவருக்குப் பதிலாக ஸ்ரீ பிரியங்கா நடித்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியங்காவிடம், சின்னத்திரையில் நடக்கும் பாலியல் அத்துமீறல் பற்று தொகுப்பாளர் கேள்வி கேட்டார்.

இதற்கு பதில் அளித்த அவர், எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் இந்த மாதிரியான புகார்கள் வரும். இது போன்ற செய்திகளை கேட்கும் போது கோபம் வருகிறது.பாலியல் அத்துமீறலால் தான் பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை மீடியா பக்கம் அனுப்பத் தயங்குகிறார்கள்.

ஆண் பிள்ளைகளை பெண்களை மதிக்கச் சொல்லி வளர்க்க வேண்டும். மேலும் பெண் பிள்ளைகளை எந்த பிரச்சினையையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று பிரியங்கா கூறியுள்ளார்.