வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்: மீனாட்சியை தேடி சென்ற ஜீவா.. மருமகள்களை நினைத்து வருந்தும் சக்தி!
வாகை சூடவா
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் வாகை சூடவா. நேற்றைய எபிசோடில் அப்பத்தா கண்ணீர் மல்க தனது வாழ்க்கை கதையை கூறி அனைவரையும் தனது பக்கம் திருப்பிய நிலையில், இன்று நடைபெறவுள்ள சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்.

இன்றைய எபிசோடில், "நம்ம இரண்டு மருமகள்களும் இப்போது வீட்டில் இல்லை. அதிலும் தேனு நம்ம குடும்ப வாரிசை சுமந்து கொண்டிருக்கிறாள்" என்று நினைத்து சக்தி வருத்தப்படுகிறார். இதனால் மனம் உடைந்திருக்கும் அவரை லோகு சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். மறுபுறம், ஜீவா நேராக மீனாட்சியின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டுகிறார். அவரைப் பார்த்தவுடன் கோபமடைந்த மீனாட்சி, "இங்க எதுக்கு வந்தீங்க?" என்று கேட்கிறாள்.
அதற்கு ஜீவா, "என் மனைவி இருக்கும் இடத்தில்தான் நான் இருப்பேன்" என்று பதிலளிக்கிறார். ஆனால் அவரது பேச்சை ஏற்க மறுக்கும் மீனாட்சி, "நீ எனக்கு வேண்டாம்" என்று கூறி கதவை மூடி விடுகிறாள். இருப்பினும், ஜீவா இரவு முழுவதும் குளிரிலும் அங்கிருந்தே வெளியே காத்திருக்கிறார். இதைப் பார்த்து மீனாட்சியின் மனம் கொஞ்சம் மாற, சுமதி ஜீவாவை வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார்.

இதனிடையே, காலையில் உடல்நலக்குறைவால் சக்தியால் படுக்கையிலிருந்து எழ முடியாத நிலை ஏற்படுகிறது. லோகு அவரை எழுப்ப முயற்சிக்க, "என்னால எழுந்துக்க முடியல" என்று சக்தி கூறுகிறார். அதற்கு லோகு, "வேலைகளை செய்யவில்லை என்றால் அம்மா திட்டுவாங்க" என்று சொல்ல, தனது இயலாமையை நினைத்து சக்தி மேலும் வருந்துகிறார். அப்போது முதல் முறையாக மனைவியின் நிலையை புரிந்து கொள்ளும் லோகு, "சரி இரு, நான் போய் உனக்கு மாத்திரை வாங்கிட்டு வரேன்" என்று அக்கறையுடன் பேசுகிறார்.
அவரது இந்த மாற்றம் குடும்பத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படிப்பட்ட பரபரப்பான சம்பவங்களுடன் வாகை சூடவா தொடரின் அடுத்த கட்டம் நகரவுள்ளது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை தெரிந்துகொள்ள Zee தமிழ் தொலைக்காட்சியில் இன்று இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் எபிசோடை காணத் தவறாதீர்கள்.