பிரம்மாண்டம்னு இப்படி நாமம் அடிக்க கூடாது சங்கர் சார்! புலம்பும் தயாரிப்பாளர்..
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் பிரம்மாண்ட இயக்குனராகவும் திகழ்ந்து வருபவர் இயக்குனர் சங்கர். முதல்வன், ஜெண்டில்மேன், எந்திரன், நண்பன், 2.0 போன்ற வெற்றிப்படங்களை அடுத்து இந்தியன் 2 படத்தினை ஆரம்பித்து பிரச்சனையில் தள்ளிபோகியுள்ளது.
இப்படத்தை கிடப்பில் போட்டு தெலுங்கு படம் பக்கம் சென்று ராம்சரணின் சிஆர்15 படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில் இந்தி நடிகை கியாரா அத்வானிக்கு கோடிகளில் சம்பளம், பாட்டுக்கு பல கோடி செலவு என பட்ஜெட்டை எகிற வைத்து வருகிறார் சங்கர்.
இதனால் அப்படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீவெங்கடேஷ்வரா புரடெக்ஷன்ஸ் நிறுவனத்தில் தில் ராஜு தயாரித்து வருகிறார். போகப்போக சங்கர் போடும் பட்ஜெட் அதிகமாகிக்கொண்டு இருப்பதால் ஷாக்க்காகி வருகிறார்.
அப்படி புலம்பும் நேரத்தில் ஆக்க்ஷன் படமென்பதால் சுமார் 10 கோடிக்கு சண்டைக்காட்சிகளுக்கு கணக்கு போட்டு கொடுத்துள்ளாராம் சங்கர். பிரம்மாண்டம் சொல்லலாம் சங்கர் சார் அதுக்கு இப்படியா ஏத்துவீங்க என்று புலம்புகிறாராம் தில் ராஜு.