குஜராத்தை பதரவைத்த RR அணியின் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி..10 வயசில் எடுத்த பயிற்சி...
ஐபிஎல் 2025
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டின் 18வது சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ப்ளே லவன் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கான 4 இடத்திற்கு 10 அணிகள் போட்டி போட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்றைய ராஜஸ்தான் - குஜராத் அணிகளுக்கிடையே நடந்த போட்டி உலக கிரிக்கெட் ரசிகர்களையே வியக்க வைத்த ஒரு சம்பவம் நடந்துள்ளது.
வைபவ் சூர்யவன்ஷி
210 ரன்கள் இலக்கை ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயம் செய்திருந்தனர் குஜராத். அதன்பின் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஓபனர்கள் மிகவும் சிறப்பாக ஆடினர். அதிலும் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 35 பந்துகளில் சதம் அடித்து விளாசினார்.
வெறும் 14 வயது ஆன வைபவ் சூர்யவன்ஷியை பலரும் பாராட்டிய நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் அவரை பாராட்டியதோடு 10 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கினார். தற்போது இணையதளங்கள் முழுவதும் சூர்யவன்ஷியை பற்றிய பதிவுகள் தான் ட்ரெண்ட்டாகி வருகிறது.
2011ல் தனது தந்தையுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரசிகராக மைதானத்தில் பார்க்க வந்திருந்த புகைப்படமும், 10 வயதில் சூர்யவன்ஷி கொரானா சமயத்தில் மொட்டை மாடியில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்ட வீடியோவும் தற்போது வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
A 10 yr old Vaibhav Sooryavanshi practicing on his terrace during the lockdown in 2021
— Vinesh Prabhu (@vlp1994) April 28, 2025
4 years later, becomes the second fastest IPL centurion ❤️🙏#IPL2025 pic.twitter.com/fGdNMGyskA
