கர்ப்பமாக இருந்தபோது நாள் ஒன்றுக்கு 100 சிகரெட் அடித்தேன்!! ஆலியா பட் அம்மா ஓபன் டாக்..
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக இருக்கும் நடிகை ஆலியா பட்டின் தாயாரும் இயக்குநர் மகேஷ் பட்டின் மனைவியும் நடிகையுமான சோனி ரஸ்தான், ஆலியா பட் வயிற்றில் இருக்கும் கர்ப்பகாலக்கட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்து பகீர் கிளப்பியுள்ளார்.

ஆலியா பட் அம்மா சோனி ரஸ்தான்
இயக்குநர் மகேஷ் பட் - நடிகை சோனி ரஸ்தான் தம்பதியினரின் மகளான ஆலியா பட், 1999ல் வெளியான சங்கர்ஷ் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து 2012ல் வெளியான ஸ்டூடண்ட் ஆஃப்தி இயர் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தார்.
அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் ஆலியா பட்டின் தாயார் சோனி ரஸ்தான் அளித்த பேட்டியொன்றில் திரைப்பயணம் குறித்து ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

நாள் ஒன்றுக்கு 100 சிகரெட்
அதில், 1993ல் மகேஷ் பட் இயக்கத்தில் வெளியான கும்ரா படத்தில் நடித்து கொண்டிருந்தபோது ஆலியா பட் கருவில் சுமந்து கொண்டிருந்தேன், ஆனால் அப்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று எனக்கு தெரியாது. அந்த சமயத்தில் ஷூட்டிங்கில் நடிப்பது எனக்கு பெரும் சவாலாக இருந்தது. அப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சிக்காக புகைப்பிடிப்பது போல் நடிக்க வேண்டியிருந்தது.

அக்காட்சிக்காக ஒரே நாலில் சுமார் 100 சிகரெட்டுகள் வரை புகைத்தேன், ஆனால் அப்போது ஆலியா பட் என் வயிற்றில் இருக்கிறாள் என்பது எனக்கு தெரியாது. நிஜ வாழ்க்கையில் எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கமே கிடையாது, அப்படத்தின் ஷூட்டிங்கில் 100 சிகரெட் ஒரு நாளில் புகைத்தப்பின், தொடர்ந்து சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் வந்தது.
அதுமட்டுமின்றி அவளை வயிற்றில்
சுமந்து கொண்டிருந்தபோதுதான், அதன்பின் 5 மாத
இடைவெளிக்குப்பின் மீண்டும் ஷூட்டிங்கிற்கு சென்றேன்.
அப்போது நான் அணிய வேண்டிய உடைகள் எனக்கு
பொருந்தவில்லை என்று சோனி ரஸ்தான் தெரிவித்துள்ளார்.