தயரிப்பாளர் தலையில் துண்டு.. கேம் சேஞ்சர் படத்தால் ஏற்பட்ட பல கோடி நஷ்டம்

Shankar Shanmugam Ram Charan Game Changer
By Kathick Jan 18, 2025 09:30 AM GMT
Report

கடந்த வாரம் வெளிவந்த கேம் சேஞ்சர் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

மாறாக எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படம் படுதோல்வியடைந்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

தயரிப்பாளர் தலையில் துண்டு.. கேம் சேஞ்சர் படத்தால் ஏற்பட்ட பல கோடி நஷ்டம் | 100 Crore Loss In Game Changer Movie

ஆனால், இப்படமும் அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. ஏமாற்றத்தை கொடுத்தது. உலகளவில் கேம் சேஞ்சர் திரைப்படம் ரூ. 194 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு ரூ. 100 கோடிக்கும் மேல் நஷ்டம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.