மிருணாள் தாகூர் காதலிப்பது தனுஷை இல்லையாம்! இவராம்!! அவரே வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள்..
மிருணாள் தாகூர்
துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர். பாலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது. இதனையடுத்து பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறார்.
சமீபத்தில் அவர் நடித்த டகோயிட் என்ற படம் வரும் 2026 மார்ச் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில் நடிகர் தனுஷை மிருணாள் காதலித்து வருவதாகவும் இருவரும் பிப்ரவரி 14 ஆம் தேதியில் திருமணம் செய்யவுள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
Siddhant Chaturvedi
ஆனால் அது வெறும் வதந்தி என்று கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை மிருணால் தாகூல், பாலிவுட் நடிகர் Siddhant Chaturvedi-வுடன் DoDeewaneसहरmein என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பிரமோஷனுக்காக, மிருணால் தாகூர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அவருடன் எடுத்த க்யூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளதை அடுத்து, அவருடன் மிருணாள் தொடர்பில் இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் தற்போதையில் இருந்து கிசுகிசு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.