எனக்கு நம்பிக்கை இல்லை! பின்வாங்கி 12 லட்சத்தை தூக்கியது இவரா?

television kamalhaasan biggbosstamil5 ciby
By Edward Jan 06, 2022 09:18 AM GMT
Report

அடுத்த வாரம் பிக் பாஸ் 5 பைனல் நடைபெற இருக்கிறது. அதில் மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர். ஆனால் தற்போது மொத்தம் 7 பேர் இருக்கின்றனர். அவர்களில் இரண்டு பேரை எலிமினேட் செய்ய வேண்டி இருக்கிறது.

இந்நிலையில் வீட்டிற்குள் கடந்த சில நாட்களாக பண பெட்டி அனுப்பப்பட்டு வருகிறது. ஒன்பது லட்சம் வரை அனுப்பப்பட்டும் அதை யாருமே எடுக்கவில்லை. இன்றைய ப்ரொமோ வீடியோவில் அமீர் தான் 11 லட்சம் ருபாய் பெட்டியை எடுத்துக்கொண்டு போவதாக கூறுகிறார்.

ஆனால் இறுதியில் அது prank என சொல்லி சமாளித்துள்ளார். இதனால் சிபி கடும் கோபமாக பேசி திட்டினார். இந்நிலையில் மூன்றாவது பிரமோ வீடியோவில் சிபி 12 லட்சத்திற்கான அந்த பெட்டியை எடுத்து சென்றுள்ளார்.

எனக்கு நம்பிக்கை இல்லை, 12 லட்சம் பணத்திற்காக நான் செல்லவில்லை என்று சக போட்டியாளர்களிடம் கூறி சென்றுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.