19 வயதில் என்ட்ரி..புற்றுநோயால் முடங்கிய நடிகையின் வாழ்க்கை!! 51 வயதில் என்ன செய்றாங்க தெரியுமா?
சினிமாவில் ஒருசில நடிகைகளுக்கு தனிப்பட்ட வகையில் பிரச்சனை ஏற்பட்டு காணாமல் போவதுண்டு. ஒருசிலருக்கு உடல்நிலை பிரச்சனை காரணமாக நிஜ வாழ்க்கை அப்படியே மாறிவிடும். அப்படி வசீகர அழகில் என்பதில் இருந்து நிஜ சாழ்க்கைப் போராளியாக மாறியவர் தான் நடிகை சோனாலி பிந்த்ரே.

சோனாலி பிந்த்ரே
மகேஷ் பாபுவின் முராரி என்ற படத்தில் டோலிவுட்டில் அறிமுகமாகி, குணால் நடித்து சூப்பர் ஹிட் படமாக மாறிய காதலர் தினத்தில் ஹீரோயினாக நடித்து 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக மாறினார் சோனாலி. 19 வயதில் மாடலிங்துறையில் அறிமுகமாகி ஒரு போட்டியில் வெற்றிபெற்றப்பின் ஆக் என்ற படத்தில் தன்னுடைய 19வயதில் கதாநாயகியாக ஃபிலிம்பேர் விருதையும் பெற்றார்.

இதனையடுத்து இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்த சோனாலி, 2018ல் புற்றுநோயுடன் போராடியபோது, அவருக்கு ஆதரவாக சல்மான் கான் இருந்தார்.
மெட்டாஸ்டேடிக் புற்றுநோய்
1999ல் ஹும் சாத் சாத் ஹைன் என்ற படத்தின் ஷூட்டிங்கின்போது சல்மான் கானுடன் ஏற்பட்ட நடத்தை காரணமாக விலகி இருந்த சோனாலிக்கு, அவர் அளித்த ஆதரவு, இருவரின் உறவில் இருந்த பழைய கருத்துவேறுபாடுகளை ஆழமான மரியாதை, நட்பாக மாற்றியது.

மெட்டாஸ்டேடிக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின் நியூயார்க்கில் சிகிச்சை பெற்றும் வந்தார். கீமோதெரபியின் போது அவர் எடுத்த புகைப்படம் வெளியாக பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. மனதைரியம், வலிமை, புன்னகை, உத்வேகம் போன்றவற்றால் அந்த ஆண்டியின் இறுதியிலேயே புற்றுநோயில் இருந்து உணமடைந்து இந்தியா திரும்பினார்.
தயாரிப்பாளர் கோல்டி பெஹ்லை என்பவரை மணந்த சோனாலிக்கு ரன்வீர் என்ற மகன் இருக்கிறார். ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் திகழ்ந்து வந்த சோனாலி 2022ல் தி ஃரோக்கன் நியூஸ் என்ற வெப் தொடரில் நடித்து மறுபிரவேசத்தை தொடங்கினார்.