22 வயதில் நடிகை சஞ்சிதா உகலே எடுத்த விபரீத முடிவு!! காரணத்தை சொன்ன நடிகை..
சஞ்சிதா உகலே
நடிகர் விக்கி கெளஷலின் Chhaava, மனோஜ் பாஜ்பாயின் சைலன்ஸ் 2 போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் 22 வயதான நடிகை சஞ்சிதா உகலே. படவாய்ப்பு இல்லாததால் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலிசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சஞ்சிதா உகலே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமான மீட்கப்பட்டார்.
இதனையடுத்து சஞ்சிதாவின் நெருங்கிய தோழியும் நடிகையுமான மேகா சர்மா அளித்த பேட்டியொன்றில், நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

சஞ்சிதாவுக்கு சில உடல்நலப் பிரச்சனைகள் இருந்தது. ஜனவரி மாதத்தில் இருந்தே அவள் கடுமையான மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தாள்.
அவள் எப்போதும் கலகலப்பாக இருப்பாள். 10 நாட்களுக்கு முன், அவளை நான் ஒரு ஆடிஷனுக்கு அழைத்துச் சென்றேன். நிச்சயம் என்னால் இந்த திரையுலகில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தாள், ஆனால் கடைசியில் இப்படியொரு முடிவை எடுப்பாள் என்று யாரும் எதிர்ப்பார்க்கவே இல்லை.