காதலுக்கு கண்ணில்லை!! 76 வயது நபரை காதலிக்கும் 25 வயது இளம்பெண்!! தூது போன முன்னாள் காதலி..
உனக்கு 76 எனக்கு 25
காதலுக்கு கண்ணில்லை, வயது முக்கியமில்லை, ஜாதி, மதம் கூட தேவையில்லை என்று கூட கூறுவார்கள். அப்படி காதலுக்கு வயது முக்கியமில்லை என்று அமெரிக்காவை சேர்ந்த ஒரு ஜோடி நிரூபித்துள்ளது. அமெரிக்காவின் சான்டியாகோ பகுதியை சேர்ந்தவர் தான் டயானா மொன்டானோ. 25 வயதான இவர் தன்னை விட 51 வயது அதிகமான, அதாவது 76 வயதுமிக்க எட்கர் என்பவரை காதலித்து வருகிறார்.

டயானா மொன்டானோ - எட்கர்
இந்த காதல் குறித்து டயானா கூறுகையில், வயது என்பது வெறும் எண் தான், நான் எட்கரை மட்டுமே திருமணம் செய்து கொள்வேன். இதனால் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் கோபம் அடைந்தாலும் பரவாயில்லை.
அவர்கள் என்னுடைய உணர்வுக்கு மதிப்பு அளிக்கவேண்டும். அவர் எல்லையில்லா இன்பத்தை எனக்கு அளிக்கிறார் என்று கூறியிருக்கிறார் டயானா. எட்கரின் முன்னாள் காதலி மூலமாகத்தான் டயானா அவருக்கு அறிமுகமாகியிருக்கிறார். பின் ஒரு வருடமாக அவர்கள் டேட்டிங் செய்துள்ளனர்.

அப்போது டயானாவிற்கு எட்கரை மிகவும் பிடித்துபோக, கடந்த 2023 ஜூலை மாதம் எட்கர் தான் முதலில் காதலை கூறியிருக்கிறார். உடனே டயானாவும் காதலை ஏற்றுக்கொண்டார்.
ஆனால் டயானாவின் இந்த காதலை அவர்களின் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். நீ வாழ்க்கையை வீணாக்கி கொண்டிருக்கிறாய் என்று கண்டித்தாலும் டயானா அதனை பொருட்படுத்தவில்லையாம். எட்கருடன் இருக்கும் உறவு உண்மையானது என்றும் டயானா கூறியிருக்கிறார்.
இவர்களின் காதல் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு நெட்டிசன்களின் குமுரல்களை ஏற்படுத்தி வருகிறது.