உலக வரலாற்றில் 3 ஆடம்பரமான திருமணம்!! யார் முதலிடம் தெரியுமா?
டாப் 10 உலக பணக்காரர்களில் ஒருவர் ஜெப் பெசோஸ். அமேசான் அதிபரான இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 18 லட்சம் கோடி என கூறப்படுகிறது. அமேசான் அதிபர் ஜெப் பெசோஸ், Lauren Sánchez என்பவரை மூன்றாம் திருமணம் செய்தார்.
இவர்கள் இருவரும் 27.06.2025-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் உலகில் கோடிஸ்வரர்களின் யார் அதிக செலவில் பிரமாண்டமான திருமணத்தை நடத்தினார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
3 ஆடம்பரமான திருமணம்
அதில் உலகில் ஆடம்பர திருமணத்தில் 3வது இடத்தினை பிடித்துள்ளார், ஜெப் பெசோஸ். இவர்களின் திருமணம் உலகி பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலமான வெனிஸ் நகரில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
வெனிஸ் நகரில் உள்ள சான் ஜியோர்ஜியோ மாகியோர் தீவையே கிட்டத்தட்ட விலைக்கு வாங்கியுள்ளார் ஜெப் பெசோஸ். அங்குள்ள தங்கும் விடுதிகள், கார்கள், படகு உட்பல அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டது. இதற்கு மட்டுமே சுமார் ரூ. 100 கோடி செலவிடப்பட்டது.
மொத்தமாக இவர்கள் திருமணத்திற்கு மட்டுமே மொத்தம் 45 மில்லியன் அமெரிக்க டாலர் செலவிடப்பட்டுள்ளது. வெனிஸில் இருக்கும் டாப் இடத்தில் இருக்கும் 5 ஹோட்டல்களை புக் செய்துள்ளார் ஜெப் பெசோஸ்.
திருமணத்திற்கு முன் பிரபோஸ் செய்த போது மனைவி லோரெனுக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வைரமோதிரத்தை அவர் விரலில் போட்டுள்ளார் ஜெப் பெசோஸ். விலையுயர்ந்த Super Yacht-ல்(கப்பல்) திருமணம் நடந்ததற்கான செலவு 500 மில்லியன் அமெரிக்க டாலர்.
டையானா - சார்லஸ்
2வது இடத்தில் 1981ல் நடந்த இளவரசி டையானா - இளவரசர் சார்லஸ் திருமணம் தான். அப்போதைய காலக்கட்டத்தில் அவர்களின் திருமணம் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நடந்துள்ளது. டயானா - சார்லஸ் திருமணத்தின் லைவ் வீடியோவை 750 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
சையத் குட்செரீவ் - கதிஜா
உலகின் பிரம்மாண்ட திருமணம் செய்தவர்கள் லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருப்பது, ரஷ்யாவின் ஆயில் ரைகான் நிறுவனத்தின் தலைவர் மிகைல் குட்செரீவ்-ன் மகன் சையத் குட்செரீவ் திருமணம் தானாம். 2016ல் கதிஜா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நடைபெற்றுள்ளது. மாஸ்கோவில் இருக்கும் விலையுயர்ந்த ஹோட்டலில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.