தனுஷ்க்கு ஏற்பட்ட அவமானம்! அவரைப் போல் 3 தயாரிப்பாளர்களால் தூக்கிவீசப்பட்ட நடிகர்..

Love Today Pradeep Ranganathan
By Edward Nov 08, 2022 08:50 AM GMT
Report

சினிமாவை பொறுத்தவரையில் கதாநாயகனாக கொடிக்கட்டி பறக்க சரியான படம் அமைந்து அது வெற்றியை தொடவேண்டும். அப்படி அடுத்தடுத்து படங்களை அவரது நடிப்பிற்கும் அழகிற்கும் திறமைக்கும் பலனாக பல தயாரிப்பாளர்கள் அவரை தேடுவார்கள்.

பிரதீப் ரங்கநாதன்

அப்படி தமிழ் மக்களின் மனதை சமீபத்தில் ஈர்த்துள்ளவர் பிரதீப் ரங்கநாதன். டிவி நிகழ்ச்சிகளில் பணியாற்றி குறும்படத்தை இயக்கி வந்த பிரதீப், ஜெயம் ரவி, காஜல் அகர்வாலை வைத்து கோமாளி படத்தினை இயக்கினார். அந்த படம் சூப்பர் ஹிட் கொடுக்க அடுத்த படத்தில் தான் நடிக்க வேண்டும் என்று ஒரு கதையை எழுதியிருக்கிறார். அதுதான் லட் டூடே என்ற படம். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து பிரதீப் ரங்கநாதன் நடித்து, இயக்கியிருக்கிறார். படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

3 தயாரிப்பாளர்கள்

கலகலப்பான கதையை கொடுத்திருக்கும் பிரதீப் இந்த படத்தினை இயக்கி நடிக்க பல கஷ்டங்களை தாண்டி வந்துள்ளார் என்பதை சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பிரதீப் கூறியுள்ளார். அதில் இந்த கதையை 3 தயாரிப்பாளர்களிடம் கூறியிருக்கிறார். கதை கூறியதோடு நான் தான் நடிப்பேன் என்று விடாபிடியாக இருந்துள்ளார்.

மேலும், என்னை வைத்து தயாரிக்கும் தயாரிப்பாளர்களுட இணைந்து பணிபுரிவேன் என்றெல்லாம் காத்திருந்தாராம். ஆனால் அந்த 3 தயாரிப்பாளர்களும் நீ எல்லாம் ஹீரோவா? என்று கூறும் அளவிற்கு பேசி தூக்கி எறிந்துள்ளனர். அதன்பின் ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டு படத்தின் வெற்றியையும் கண்டு வருகிறார்கள்.