ஒரு ஷோக்கு 60 ஆயிரம் சம்பளம்!! 33 வயதாகும் VJ மணிமேகலையின் சொத்து எவ்வளவு தெரியுமா?
VJ மணிமேகலை 33
குக் வித் கோமாளி, சிரிக்காதவர்களை கூட குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் ஒரு நிகழ்ச்சி. விஜய் தொலைக்காட்சியில், கடந்த 2019ம் ஆண்டு பார்திவ் மணி இயக்கத்தில் முதல் சீசன் தொடங்கப்பட்டது. முதல் சீசன் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்க, அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த வருடம் ஒளிப்பரப்பான சீசன் 5ல் மணிமேகலையும் தொகுப்பாளராக இருந்தார். ஆனால் ஷோவில் போட்டியாளராக இருந்த VJ பிரியங்கா உடன் ஏற்பட்ட சண்டை காரணமாக மணிமேகலை வெளியேறிவிட்டார். அது பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் ஷோவையும் ப்ரியங்காவையும் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.
இதையடுத்து மணிமேகலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோட் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது மணிமேகலை அவரது 33வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
சொத்து மதிப்பு
பிரபலங்கள் பலர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வரும் நிலையில் மணிமேக்லையின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில் இதுவரை யூடியூப் மற்றும் தொகுப்பாளினியாக பணியாற்றி சுமார். ரூ 7 கோடி சொத்தை மணிமேகலை மற்றும் அவரது கணவர் உசைன் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் மணிமேகலை கணவர் ஹுசேன் வெளியிட்ட வீடியோவில், அவரது அம்மா எல்லாமே சேர்த்து கண்டிப்பா 40 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறியிருக்கிறார். இதற்கு மணிமேகலை, ’எம்மா சும்மா இரும்மா’ என்று ரியாக்ஷன் கொடுத்துள்ளார் குறிப்பிடத்தக்கது.