ஒரே குடும்பத்தில் 4 ஹீரோயின்கள்!! கோடியில் சம்பளம் வாங்கும் லேடி சூப்பர் ஸ்டார்..

Bollywood Indian Actress Priyanka Chopra Meera Chopra
By Edward Jul 26, 2025 02:30 AM GMT
Report

4 சகோதரிகள்

பாலிவுட்டில் நெபோடிசம், ஒற்றைக்குடும்ப ஆதிக்கம் தொடர்பாக அதிகம் பேசப்படுவது வழக்கம். ஆனால் தங்களின் திறமையால் குடும்ப உதவி இன்றி டாப் இடத்திற்கு வரும் வாரிசு நட்சத்திரங்களும் இருக்கிறார்கள். அப்படி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சகோதரி வெவ்வேறு காலக்கட்டத்தில் நாயகிகளாக வலம் வருகிறார்கள். அதில் முக்கிய நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக ஒருவர் திகழ்ந்து வருகிறார்.

ஒரே குடும்பத்தில் 4 ஹீரோயின்கள்!! கோடியில் சம்பளம் வாங்கும் லேடி சூப்பர் ஸ்டார்.. | 4 Actress From Same Family But One Lady Superstar

பிரியங்கா சோப்ரா

அந்த நடிகை வேறுயாருமில்லை நடிகை பிரியங்கா சோப்ரா சகோதரிகள் தான். 2000 ஆம் ஆண்டு உலகழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா, விஜய்யின் தமிழன் படத்தில் 2002ல் அறிமுகமாகினார். அதன்பின் பாலிவுட் பக்கம் சென்று டாப் நடிகையாக திகழ்ந்து ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். சினிமாவை தாண்டி விளம்பரங்கள், பிராண்ட் அம்பாஸ்டராகவும் திகழ்ந்து சம்பாதித்து வருகிறார்.

ஒரே குடும்பத்தில் 4 ஹீரோயின்கள்!! கோடியில் சம்பளம் வாங்கும் லேடி சூப்பர் ஸ்டார்.. | 4 Actress From Same Family But One Lady Superstar

மீரா சோப்ரா

 அவரைப்போல் தமிழில் 2005ல் வெளியான அன்பே ஆரூயிரே படத்தின் மூலம் பிரியங்கா சோப்ராவின் சகோதரி மீரா சோப்ரா அறிமுகமாகினார். அதன்பின் பல படங்களில் நடித்த மீரா சோப்ரா, பெரிய உச்சத்தை பிடிக்காமல் ரக்ஷித் கெஜ்ரிவாலை திருமணம் செய்து செட்டிலாகினார்.

ப்ரினீதி சோப்ரா

பிரியங்காவின் மற்றொரு சகோதரி ப்ரினீதி சோப்ரா 2011ல் இந்தியில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து சரியான வரவேற்பை பெறாமல் சரிவை சந்தித்தார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க துவக்கியிருக்கிறார் ப்ரினீதி சோப்ரா.

மன்னாரா சோப்ரா

பிரியங்கா சோப்ராவின் 3வது சகோதரி மன்னாரா சோப்ராவும் பாலிவுட்டில் அறிமுகமாகி பெரிய வெற்றியை பெறாமல் தொலைக்காட்சி மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கவனம் செலுத்தினார். பிக்பாஸ் 17 போட்டியாளராக கலந்து கொண்டும் இருந்தார்.