மிருணாள் தாகூரின் காதலன் யார் தெரியுமா? காதல் முறிவு குறித்து பேசிய நடிகை
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மிருணாள் தாகூர். இவர் சீதா ராமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அடுத்ததாக இவர் நடிப்பில் டகாய்ட் எனும் படம் வெளிவரவுள்ளது.
இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சமீபத்தில், நடிகை மிருணாள் தாகூர் மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் வதந்திகள் பரவியது.

அது உண்மையில்லை என மிருணாள் தாகூர் தரப்பில் இருந்து அதன்பின் தெரிவித்தனர். இதன்பின் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகை மிருணாள் தாகூர் தனது முதல் காதல் முறிவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதில் "நான் ஒரு நடிகை என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகவும் பாரம்பரியமான குடும்ப பின்னணியில் இருந்து அவர் வந்ததால், என் வாழ்க்கை முறையும், தொழிலும் அவருக்கு சௌகரியமாக இல்லை. அந்த தருணத்தில், இருவருக்கும் பிரிந்து செல்வதுதான் சிறந்தது என்று நான் உணர்ந்தேன்" என கூறியுள்ளார்.