40 ஆண்டுகால சினிமா வாழ்க்கை! நடிகை மீனா இந்த அளவிற்கு வர இவர் தான் காரணமாம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் தமிழ், மலையாளம் என நடித்து வந்த மீனா ரஜினிகாந்துடன் இரு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் அவருக்கே ஜொடியாக பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். இதையடுத்து, முன்னணி நடிகர்கள் படங்களிலும் நடித்து பல விருதுகளை பெற்றார் மீனா.

தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த மீனா, தன் மகள் நைனிகா வித்யாசகரை நடிகர் விஜய்யின் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

தற்போது அண்ணாத்த, திரிஷ்யம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் மீனாவை முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியது நடிகர் சிவாஜி தானாம். மேடை நாடகத்தில் நடிகை மீனாவின் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுத்தாராம் சிவாகி. இதை சில பேட்டிகளிலும் மீனா கூறியுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்