40 வருட தயாரிப்பிற்கு ஒரே படத்தால் சோலியை முடித்த அஜித் குமார்.. 12 வருடமாக முடங்கி இருக்கும் நிலை..

Ajith Kumar Prabhu Sivaji Ganesan
By Edward Oct 25, 2022 08:20 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக திகழ்ந்து கோடிக்கணக்கில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார். வலிமை படத்தினை அடுத்து துணிவு படத்தில் எச் வினோத் கூட்டணியில் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏராளமான வெற்றியை கொடுத்திருந்த அஜித் சமீபகாலமான தோல்விகளையும் சந்தித்துள்ளார்.

அப்படி 40 வருடமாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆரம்பித்த தயாரிப்பு நிறுவனம் சிவாஜி பிரடொக்ஷன்ஸ். பல வெற்றிப்படங்களை கொடுத்து தாங்கி நின்ற இந்நிறுவனம் 2010ல் வெளியான அஜித்தின் அசல் படத்தினை தயாரித்தது.

இயக்குனர் சரண் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஆனால் படம் எதிர்ப்பார்த்த படி வெற்றி பெறாமல் நஷ்டத்தை கொடுத்தது.

இதனால் பணத்தை போட்டு எடுத்த சிவாஜி பிரடொக்ஷன்ஸ், இப்படத்தினை அடுத்து எந்த படத்தையும் தயாரிக்கவே இல்லை.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கடந்தும் தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்து வருகிறது. அப்படியொரு தோல்வியை கண்டதுதான் இதற்கு காரணம்.

Gallery