இழுத்தடித்த நயன் லிப்லாக் போஸ்டர்!! சிம்புவால் நடுத்தெருவுக்கு வந்த 5 பேர்..
குட்டிக்குழந்தையாக தன் கேரியரை ஆரம்பித்து சினிமா அனுபவத்தை அதிகமாகவே கற்றுத்தேர்ந்தவர் நடிகர் சிம்பு. ஆனால் மொத்த பெயரையும் காதல் கத்திரிக்கா மற்றும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவது போல் சிலரை நம்ப வைத்தும் ஏமாற்றி நடுத்தெருவுக்கு வரவழைத்து சிக்கலையும் சந்தித்திருக்கிறார். அவரால் பாதிக்கப்பட்ட 5 தயாரிப்பாளர்களை பார்ப்போம்..
சிம்பு இயக்கி நடித்த படமான வல்லவன் படத்தை பிஎல் தேனப்பன் தயாரித்திருந்தார். இப்படம் கிட்டத்தட்ட மூன்று வருமாக இழுத்தடித்திருக்கிறார் சிம்பு. கோபத்தில் இருந்த தயாரிப்பாளர் பிரச்சனை செய்ததால் படத்தில் நயன் தாராவுடன் லிப்லாக் காட்சியில் வரும் புகைப்படத்தை போஸ்டர் அடித்து ஒட்டியதோடு கோர்ட் கேசு என்று நீதிபதி எச்சரிக்கைவிடுத்து அனுப்பியிருக்கிறார்.
சிம்பு இயக்கி நடித்த வல்லவன், மன்மதன் படத்தை அடுத்து ஜி டி நந்தகுமார் தயாரிப்பில் கெட்டவன் படம் உருவானது. ஆனால் படம் இழுத்து மூடியதோடு தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டத்தை கொடுத்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் வேட்டை மன்னன் படத்தில் நடித்து வந்த சிம்பு அவருக்கும் டிமிக்கி கொடுத்து கேரியரை நாசம் செய்திருக்கிறார். அப்படத்தால் மன உளைச்சலில் இருந்ததாகவும் நெல்சன் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
ரெட் கார்ட் போடும் அளவிற்கு சிம்பு மிகப்பெரிய சம்பவத்தை செய்த படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவான இப்படம் சிம்பு கொடுத்த டார்ச்சர் ஒன்றா இரண்டா. ரொம்பவே அலைக்கழிக்கப்பட்டு இஷ்டத்திற்கு கதையை மாற்ற சொல்வது இயக்குனரிடம் வீம்பு பிடிப்பது, ஷூட்டிங் வராதது என்று ஆதிக் ரவிச்சந்திரன் கேரியரை நாசம் செய்திவிட்டார்.
பல விசயங்களில் சிம்பு நல்லது செய்தாலும் சில நேரத்தில் ஐசரி கணேஷ்-க்கு பிரச்சனையாகவே இருந்திருக்கிறார் சிம்பு. தன்னுடைய இரண்டாம் கேரியரை துவக்கிய அவருக்கே அல்வா கொடுத்தார் சிம்பு. டாக்டர் பட்டத்தோடு படத்தையும் கொடுத்து அட்வான்ஸ் வாங்கி டிமிக்கியும் கொடுத்து ஏமாற்றி இருக்கிறார் சிம்பு.