தயாரிப்பாளர்கள் செய்த துரோகத்தால் ஏற்பட்ட மன உளைச்சல்!! அஜித்துக்கு தலைவலியை கொடுத்த படங்கள்..
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார் அனைவரிடமும் மரியாதையுடனும் இன்முகத்துடன் தான் பழகக்கூடியவர். அப்படிப்பட்ட அஜித்திற்கே தலைவலி கொடுக்கும் வகையில் சில படங்கள் அமைந்துள்ளது. சில தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட மன கசப்பால் அஜித் இன்றுவரை அவர்கள் தலையில் முழிக்காமல் இருந்து வருகிறார்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி, அஜித், ஐஸ்வர்யா ராய், தபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இப்படம் ஆரம்பிக்கும் முன் அஜித்திற்கு விபத்து ஏற்பட்டு வீல் சேரில் இருந்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர் வேறொரு நடிகரை பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவெடுக்க, கேள்விப்பட்ட அஜித் வீல் சேரில் சென்று தயாரிப்பாளரை சமாதானப்படுத்தி படத்தில் நடித்து முடித்துக்கொடுத்துள்ளார். அதிலிருந்து அந்த தயாரிப்பாளர் பக்கமே அஜித் செல்லவில்லை.
சிட்டிசன்
2001ல் இயக்குனர் சரவண சுப்பையா இயக்கத்தில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் சிட்டிசன். நிக் ஆர்ட்ஸ் தயாரித்த இப்படத்தின் போது அஜித் உடல் ரீதியாக பிரச்சனையில் இருந்துள்ளார் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால் உடல் எடை அதிகரிக்கத்துவங்கியது. அதையும் பொருட்படுத்தாமல் படத்தினை கஷ்டத்தோடு முடிவித்து கொடுத்துள்ளார் அஜித்.
அசல்
2010ல் சிவாஜி பிரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தோல்விப்படமாக அஜித்திற்கு அமைந்த படம் அசல். இப்படத்தின் ஷூட்டிங் வெளி மாநிலம் ஒன்றில் நடந்துள்ளது. அதற்காக ஒரு ஓட்டலில் தயாரிப்பாளர் ரூம் போட்டு படக்குழுவினரை தங்க வைத்திருக்கிறார். அப்போது படத்தின் தயாரிப்பாளர் அஜித்துடன் ஏற்பட்ட மோதலில் அம்போன்னு படக்குழுவினரை அப்படியே விட்டு ஓடிவிட்டார். தயாரிப்பாளர் ஓட்டலுக்கு பணத்தை செட்டில் செய்யாமல் போக அஜித் தான் முன்வந்து காசு செலவழித்து படக்குழுவினரை மீட்டுள்ளார். அன்றிலிருந்து அஜித் அந்த தயாரிப்பாளர் பக்கம் செல்லவில்லை.
நான் கடவுள்
பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் அஜித் தான் முதலில் நடிக்கவிருந்தது. அப்படத்தில் அஜித்தை பாலா அடித்ததால் தான் அஜித் விலகிவிட்டார் என்றும் செய்திகள் வெளியானது. அஜித் அப்படத்தில் இருந்து விலக காரணம் படத்தின் தயாரிப்பாளரிடம் ஏற்பட்ட பிரச்சனை தான் என்று கூறப்படுகிறது.
ரெட்
சிங்கம்புலி இயக்கத்தில் வெளியான ரெட் படத்தின் போது தயாரிப்பாளர் கதையை வேறுவிதமாக கையாண்டதால் தோல்வியை சந்தித்தது. இதனால் அஜித்திற்கு சில நெகட்டிங் கமெண்ட்ஸ்கள் வந்ததால் சில மன கசப்பிற்கு ஆளாகியிருந்தார்.
இதுபோல் பல தயாரிப்பாளர்கள் பாக்கி சம்பளம் உட்பட பல பிரச்சனைகளை செய்துள்ளார்கள். அன்றில் இருந்து அஜித் இப்படிப்பட்ட தயாரிப்பாளர்களின் சவகாசம் வைத்துக்கொள்வதை நிறுத்திவிடுவார்.