5 மாநில தேர்தல் : மாநில முதலமைச்சர்களில் யார் நம்பர் 1 கோடிஸ்வர CM தெரியுமா?

M K Stalin Pinarayi Vijayan Puducherry Mamata Banerjee Tamil Nadu Election 2026
By Edward Apr 07, 2026 02:00 PM GMT
Report

2026 ஆம் ஆண்டுக்காக சட்டமன்ற தேர்தல், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் நடக்கவுள்ளது. தற்போது போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகிறார்கள்.

5 மாநில தேர்தல் : மாநில முதலமைச்சர்களில் யார் நம்பர் 1 கோடிஸ்வர CM தெரியுமா? | 5 State Elections Net Worth Of Each Chief Minister

அப்படி வேட்பு மனு செய்யும் போது தங்களின் சொத்து மதிப்பையும் ஆவணத்தில் குறிப்பிடுவார்கள். அந்தவகையில், 5 மாநில முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு என்ன? யார் நம்பர் 1 கோடிஸ்வரர் என்ற லிஸ்ட் வெளியாகியுள்ளது.

1 கோடிஸ்வர CM

புதுச்சேரியின் முதலமைச்சர் எம் ராங்கசாமி, தன்னுடைய தேர்தல் பிரமாணப் பாத்திரத்தில் தன் சொத்து மதிப்பு சுமார் ரூ. 1 கோடி என குறிப்பிட்டுள்ளார்.

5 மாநில தேர்தல் : மாநில முதலமைச்சர்களில் யார் நம்பர் 1 கோடிஸ்வர CM தெரியுமா? | 5 State Elections Net Worth Of Each Chief Minister

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தேர்தல் பிரமாணப் பாத்திரத்தில் ரூ.42.35 லட்சம் ரூபாய் சொத்து மதிப்பு என்றும் மனைவி பெயரில் சுமார் ரூ.69.58 லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார்.

அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தேர்தல் பிரமாணப் பாத்திரத்தில் ரூ.2.36 கோடி சொத்து மதிப்பு இருப்பதாகவும் 1.41 கோடி ரூபாய்க்கு கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

5 மாநில தேர்தல் : மாநில முதலமைச்சர்களில் யார் நம்பர் 1 கோடிஸ்வர CM தெரியுமா? | 5 State Elections Net Worth Of Each Chief Minister

மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேர்தல் பிரமாணப் பாத்திரத்தில் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.16 லட்சம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

5 மாநில தேர்தல் : மாநில முதலமைச்சர்களில் யார் நம்பர் 1 கோடிஸ்வர CM தெரியுமா? | 5 State Elections Net Worth Of Each Chief Minister

நம்பர் 1

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய தேர்தல் பாத்திரத்தில் ரூ.9 கோடி சொத்து மதிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த 5 மாநில முதலமைச்சர்களில் முதல்வர் ஸ்டாலின் தான் கோடீஸ்வர முதலமைச்சராக திகழ்கிறார்.