சிவகார்த்திகேயன் வளர்ச்சிக்கு இந்த 5 பேர் தான் பிரச்சனையே!! 6-வதாக இணைந்த டி இமான்..
சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாக தன் உழைப்பால் தற்போது டாப் நடிகராகவும் 30 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். ஆனால் அவரது உழைப்பிற்கு பலர் பல விதங்களில் துரோகம் செய்து வளர்ச்சியை கெடுத்தனர். அப்படி அவரது வளர்ச்சிக்கு சில நடிகர்களும் இடைஞ்சலாக இருந்துள்ளனர். அப்படி யார் யார் அந்த நடிகர்கள் என்று பார்ப்போம்..
நடிகர் கார்த்திக் அறிமுகமாகி ஒரு படம் வெற்றியை தொடர்ந்து அதன்பின் தோல்வியை சந்தித்து வந்தார். அப்போது கார்த்தி வீழ்ச்சி சமயத்தில் சிவகார்த்திகேயன் சினிமாவில் நுழைந்து விஸ்வரூப வளர்ச்சி எடுத்ததால் கார்த்தி கொஞ்ச பொறாமையில் இருந்தார் என்றும் கூறப்பட்டது.
அறிமுகம் செய்து வைத்த நடிகர் தனுஷே சிவகார்த்திகேயன் வளர்ச்சியை தடுக்கும் சுயநலம் கொண்டவராக இருந்தார். இதனை மேடையில் கூட தனுஷ் ஓப்பனாக பேசினார்.
குறுகிய காலக்கட்டத்தில் டாப் இடத்தினை பிடித்த நடிகர் சிவகார்த்திகேயனை நினைத்து நடிகர் சிம்புவிற்கு பிடிக்காமல் போனதாக கூறப்பட்டது.
டாப் நடிகராக இருந்த நடிகர் ஜெயம் ரவி உயரத்தில் இருந்த போது சிவகார்த்திகேயன் வளர்ச்சியால் காண்டாகினார். வாரிசு நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜெயம்ரவி நடிகர்கள் ஒரே குடும்பமாக இருந்த நிலையில் சிவகார்த்திகேயன் வளர்ச்சி பிடிக்காமல் போனது.
யாரெல்லாம் மாஸ் ஹீரோ என்று கூற விவஸ்த்தை இல்லாமல் போச்சு என்று சிவகார்த்திகேயனின் வளர்ச்சியால் நடிகர் அருண் விஜய் கடுப்பாகினார்.
சூர்யாவின் சிங்கம் 2, 24 மட்டுமே 100 கோடி வசூலை பெற்றது. ஆனால் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த 100 கோடி வசூல் செய்து குறுகிய காலத்தில் சூர்யாவுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் 100 கோடி கிளப்பில் இணைந்தது சூர்யா ரசிகர்களுக்கு கோபத்தையும் கொடுத்தது.
தற்போது, நடிகர்களை தாண்டி சிவகார்த்திகேயனுக்கு புது வில்லனாக அறிமுகமாகி இருக்கிறார் இசையமைப்பாளர் டி இமான். தனக்கு செய்த தூரோகம் தான் அதற்கு காரணம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video