70 வயதில் 4வது திருமணம்!! 29 வயது இளம்பெண்னை மணந்த நடிகருக்கு இப்போ 80...

Gossip Today Actors Bollywood Marriage
By Jai Apr 18, 2026 07:45 AM GMT
Report

காதலுக்கு வயதில்லை என்பதை சினிமாவில் தொடங்கி தற்போது நிஜ வாழ்க்கையிலும் அதை நிரூபித்து வருகிறார்கள். அப்படி பல நட்சத்திரங்கள் பல வருட வித்தியாசமுள்ளவர்களை திருமணம் செய்வார்கள்.

கபீர் பேடி

அந்தவகையில் நடிகர் ஒருவர் தன்னுடைய 70 வயதில் 4வது திருமணம் செய்துள்ளார். அதுவும் அவரைவிட 29 ஆண்டுகள் இளையவரை கரம்பிடித்திருக்கிறார். அவர் தான் 1971ல் வெளியான ஹல்சல் படத்தின் ஹீரோ கபீர் பேடி. ஷாருக்கானின் ’மை ஹூ நா’ படத்தில் நடித்து பிரபலமான கபீர் பேடியின் தனிப்பட்ட வாழ்க்கை தலைப்புச் செய்தியாக மாறி கவனத்தை ஈர்க்கும்.

70 வயதில் 4வது திருமணம்!! 29 வயது இளம்பெண்னை மணந்த நடிகருக்கு இப்போ 80... | 70 Years Old Actor Married 29 Years Old Lady

4 திருமணம்

1969ல் நடன கலைஞரான பிரதிமா கவுரை காதலித்து இரு வீட்டையும் எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண விரைவில் கசக்க, 2 குழந்தைகள் இருந்தும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

பின் அமெரிக்காவில் மாடலிங் செய்து கொண்டிருந்த கபீர் பேடி, சூசன் ஹம்ப்ரீஸை சந்தித்து, காதலித்தப்பின் 1980ல் அவரை 2ஆம் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் 10 ஆண்டுகளுக்கு பின் தம்பதிக்கு ஒரு மகன் இருக்கையில் 1990ல் விவாகரத்து செய்தனர்.

70 வயதில் 4வது திருமணம்!! 29 வயது இளம்பெண்னை மணந்த நடிகருக்கு இப்போ 80... | 70 Years Old Actor Married 29 Years Old Lady

பின் பிபிசி வானொலியில் பணியாற்றி கபீர் பேடி, அவருடன் பணியாற்றிய நிக்கி முல்கவ்கர் என்பவருடன் காதல் வயப்பட்டு, 1992ல் திருமணம் செய்து கொண்டனர். நிக்கி முல்கவ்கர், கபீர் பேடியைவிட 20 வயது இளையவர். நிக்கி லண்டனில் இருக்க, கபீர் இந்தியாவில் இருக்க, இடைவெளி அதிகரிக்க கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு 2004ல் இருவரும் பிரிந்தனர்.

70 வயதில் 4வது திருமணம்!! 29 வயது இளம்பெண்னை மணந்த நடிகருக்கு இப்போ 80... | 70 Years Old Actor Married 29 Years Old Lady

இதனையடுத்து கபீர் பேட்டி, 2016ல் லண்டனை சேர்ந்த இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பர்வீன் துசாஞ்ச் என்பவரை காதலித்து 4வது திருமணம் செய்து கொண்டார். 29 வயதான பர்வீன் துசாஞ்ச்-ஐ 70 வயதில் கபீர் பேடி 4வது திருமணத்தை செய்து கொண்டார். தற்போது அவருக்கு 80 வயதாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

70 வயதில் 4வது திருமணம்!! 29 வயது இளம்பெண்னை மணந்த நடிகருக்கு இப்போ 80... | 70 Years Old Actor Married 29 Years Old Lady