கிரிக்கெட் வீரருடன் 8 வருஷம் டேட்டிங்!! சினிமாவை விட்டே ஒதுங்கிய பிரபல நடிகை.. யார் தெரியுமா?
இந்திய நடிகைகளுடன் கிரிக்கெட் வீரர்கள் காதலில் இருப்பது வழக்கமான ஒன்றுதான். அப்படி பல கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளை திருமணம் செய்துள்ளனர். விராட் கோலி, முன்னாள் கேப்டன் அசாருதீன், கே எல் ராகுல், யுவராஜ் சிங் உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள் நடிகையை திருமணம் செய்து கொண்டனர். ஒருசில கிரிக்கெட் வீரர்கள் டேட்டிங் சென்று பின் பிரிந்தும் இருக்கிறார்கள்.
கீதா பஸ்ரா
அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி நடிகை ஷர்மிளா தாகூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரை போல் முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், இந்தி பட நடிகை கீதா பஸ்ராவை 8 ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்து பின் திருமணம் செய்துள்ளாராம்.
ஆரம்பத்தில் ஹர்பஜன் சிங்கின் காதலை கீதா பஸ்ரா நிராகரித்ததாகவும் பின் டேட்டிங்கின் போது லண்டன் நகர வீதிகளில் ஹர்பஜன் சிங்கும் கீதா பஸ்ராவும் ஜோடியாக சுற்றியதாகவும் செய்திகள் பரவியது. அதன்பின் இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற போது இந்தியாவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து, ஹர்பஜன் சிங்கிற்கும் கீதா பஸ்ரா வாழ்த்து செய்தி அனுப்பினார்.
ஹர்பஜன் சிங்குடன் டேட்டிங்
அப்போது ஏற்பட்ட தொடர்பு இருவருக்கும் இடையே காதலை வளர்க்க காரணமாக அமைந்ததாம். நடிப்பில் முழு கவனம் செலுத்தி கீதா பஸ்ரா, ஹர்பஜன் சிங்குடன் காதலில் விழுந்தப்பின் அவர் தான் உலகம் என்று 2015 அக்டோபர் 29ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
அப்போதில் இருந்து சினிமாவில் நடிப்பதை கீதா பஸ்ரா நிறுத்திவிட்டு 2 மகன்கள், ஒரு மகளை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார். ஆனால் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட் எடுத்த பகிர்ந்து வருகிறார் நடிகை கீதா பஸ்ரா.