விஜய் டிவி தொகுப்பாளர்களில் யாருக்கு சம்பளம் அதிகம்!! கோடியில் புறளும் ஒரே VJ..

Ma Ka Pa Anand Priyanka Deshpande Star Vijay Gopinath Chandran Rakshan
By Edward Jun 18, 2025 07:45 AM GMT
Report

சின்னத்திரை சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பலர் பிரபலமாகிவிடுவார்கள். அப்படி விஜய் டிவியில் தொகுப்பாளர்களாக பணியாறி மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்கள் பலர். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் விஜய் டிவி தொகுப்பாளர்களின் மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குகுகிறார்கள்? மற்றும் யார் அதில் டாப் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ரக்‌ஷன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யார் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் ரக்‌ஷன், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு எபிசோட்டிற்கு ரூ. 1 லட்சத்திற்கும் மேல் சம்பளமாக வாங்குகிறாராம்.

விஜய் டிவி தொகுப்பாளர்களில் யாருக்கு சம்பளம் அதிகம்!! கோடியில் புறளும் ஒரே VJ.. | Vijay Tv Anchors Priyanka Makapa Gopinath Salary

மாகாபா ஆனந்த்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் மாகாபா ஆனந்த், ஒரு எபிசோட்டிற்காக 2.5 லட்சம் சம்பளமாக பெறுகிறாராம்.

பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் டிவியில் பெண் தொகுப்பாளர்கள் மிகப்பெரியளவில் பிரபலமாவது வழக்கம். அப்படி டிடி, ரம்யா, பாவனாவை தொடர்ந்து மிகப்பெரியளவில் மக்கள் ஆதரவை பெற்று வருபவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.

சமீபத்தில் திருமணம் முடித்த பிரியங்கா, சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அவர் ஒரு எபிசோட்டினை தொகுத்து வழங்க சுமார் ரூ. 3 லட்சத்திற்கும் மேல் சம்பளமாக பெறுகிறாராம்.

விஜய் டிவி தொகுப்பாளர்களில் யாருக்கு சம்பளம் அதிகம்!! கோடியில் புறளும் ஒரே VJ.. | Vijay Tv Anchors Priyanka Makapa Gopinath Salary

கோபிநாத்

விஜய் டிவியில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிப்பரப்பாகி டாப் நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி நீயா நானா. கோபிநாத் ஆல் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா நிகழ்ச்சி இன்று வரை மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியின் ஒரு எபிசோட்டை தொகுத்து வழங்க கோபிநாத்துக்கு, விஜய் டிவி சுமார் ரூ. 5 லட்சம் வரை சம்பளமாக வழங்கி வருகிறதாம். இதுமட்டும் இல்லாமல் முன்னணி நட்சத்திரங்களை பேட்டி எடுக்க பல லட்சத்தில் சம்பளமாக கோபிநாத் பெற்று வருகிறார்.

விஜய் டிவி தொகுப்பாளர்களில் யாருக்கு சம்பளம் அதிகம்!! கோடியில் புறளும் ஒரே VJ.. | Vijay Tv Anchors Priyanka Makapa Gopinath Salary

விஜய் சேதுபதி

நடிப்பு, தயாரிப்பை தாண்டி தொகுப்பாளராக களமிறங்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு ஒரு எபிசோட்டிற்கு 4 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று 15 எபிசோட்டிற்கு சுமார் 60 கோடி பெற்றிருக்கிறார் விஜய் சேதுபதி.