சிங்கத்துக்கு உண்டான மரியாதையை போச்சு! இவங்கதான் சிங்கப்பெண்

woman lion singapenne
By Jai Jan 06, 2022 06:30 PM GMT
Report

காட்டுக்கு ராஜா என்று கூறப்படும் விலங்கு சிங்கம். காட்டில் முரட்டுத்தனமாக காட்சியளிக்கும் சிங்கத்தினை சிலர் வீட்டில் வைத்து வளர்ப்பதும் உண்டு.

அப்படி குவைத் நாட்டில் ஒரு பெண்மணி தான் வளர்ந்த சிங்கத்தை தூக்கியபடி சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.

அந்த சிங்கத்தின் உரிமையாளர் தான் அந்த பெண். வீட்டில் இருந்து தப்பித்து தெருக்களில் உலாவியுள்ளது. இதையறிந்து அப்பெண் சிங்கத்தை தூக்கி சென்றுள்ளார்.

இதனை கண்டு போலிசார் அவரிடம் இருந்து சிங்கத்தை பிடித்து சென்று பின் அவரிடமே கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.