21 வருஷமாக ஒதுக்கி வரும் அஜித்! குரங்குகிட்ட மாட்டியும் ஏமாற்றத்தில் ஏ.ஆர் முருகதாஸ்

ajith vijay armurugadass
By Edward Apr 11, 2022 08:21 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வந்த இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். நடிகர் அஜித்தை தீனா படத்தினை இயக்கி அறிமுகமாகினார். படம் சூப்பர் ஹிட் கொடுத்த பிறகு ஏ ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் நிமிர்ந்து பார்க்கும் இயக்குனராக மாறினார்.

அதன்பின் ரமணா, கஜினி, 7 ஆம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்கார், தர்பார், போன்ற படங்களை இயக்கி கோடிகளில் வசூல் வேட்டையாடினார். ரஜினியை வைத்து தர்பார் படத்தினை இயக்கத்திற்கு பிறகு எந்த முன்னணி நடிகர்களும் அவருக்கு வாய்ப்பு கொடுப்பதை நிருத்திவிட்டனர்.

அது அஜித்தில் இருந்து ஆரம்பித்துள்ளது. தீனா படம் வெளியாகி 21 வருடங்களாகியும் அப்படத்திற்கு பிறகு அஜித் ஏ ஆர் முருகதாஸை ஒதுக்கியே வந்துள்ளார்.

தீனாவிற்கு பின் அஜித்தை வைத்து மிரட்டல் என்ற கதை கூற அஜித் கதை நன்றாக இல்லை என்று கூறி வேண்டவே வேண்டாம் என்ற் கூறிவிட்டாராம். அதன்பின் அக்கதையை கஜினி என்ற தலைப்பில் சூர்யாவை வைத்து எடுத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தார்.

பெரும்பாலும் முருகதாஸ் வசூல் பற்றியே பேசு அதில் மூக்கை நுழைப்பதும் தர்பார் படத்தின் படுதோல்வி போன்றவை தான் முன்னணி நடிகர்கள் அவரை ஒதுக்க காரணமாக இருக்கிறதாம்.

விஜய்யை கூட அணுகியும் சில கருத்து வேறுபாடுகள் கதை பிடிக்க வில்லை என்ற காரணத்தாலும் வேண்டாம் என்று முருகதாஸை ஒதுக்கிவிட்டாராம்.

இதையடுத்து முன்னணி நடிகர்கள் எல்லாம் வேண்டாம் என்று ஒரு குரங்கை வைத்து படம் எடுக்க முடிவு செய்துள்ளாராம் ஏ ஆர் முருகதாஸ். இதற்கு முன் தெலுங்கு, தமிழ் மொழிகளில் வில்லனாக நடித்த கோபிசந்த்-ஐ வைத்து படம் எடுக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதுவும் கைக்கு எட்டவில்லை என்று கூறப்படுகிறது.