மேடையிலேயே ஏ ஆர் ரகுமானை அசிங்கப்படுத்திய போலிசார்!! அதிர்ச்சியில் கொந்தளிக்கும் ரசிகர்கள்..

A R Rahman
By Edward May 02, 2023 07:36 AM GMT
Report

இந்திய சினிமாவின் இசைப்புயலாக திகழ்ந்து பல கோடி ரசிகர்களை ஈர்த்து வருபவர் ஏ ஆர் ரகுமான். இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று உலகளவில் பிரபலமான ஏ ஆர் ரகுமான், எங்கு சென்றாலும் தமிழின் பெருமையை சேர்த்து வருகிறார்.

அந்தவகையில் பொன்னியின் செல்வன் படத்திற்காக இசையமைத்து படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

இதேபோல் சமீபத்தில் நடந்த விருதுவிழாவின் போது தன் மனைவியை மேடையில், இந்தியில் பேசக்கூடாது என்று கூறியது மிகப்பெரியளவில் வைரலானது.

இந்நிலையில் புனேவில் இசை கச்சேரியை சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் நடத்தியிருக்கிறார். நிகழ்ச்சிக்கு 10 மணி வரைக்கும் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் 10 மணிக்கு மேல் ஆகியும் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்ததால் கடுப்பாகிய புனே போலிசார், மேடையில் ஏறி ஏ ஆர் ரகுமானை கைநீட்டி நிறுத்தச் சொல்லியுள்ளார். இந்த சம்பவம் தற்போது மிகப்பெரியளவில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.