ரகுமான் வீட்டையும் விட்டு வைக்கலையா! ரஜினியால் புலம்பும் ஆஸ்கார் நாயகன்..

enthiran rajinikanth ar rahman 2.0
By Edward Nov 12, 2021 04:55 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் இந்திய சினிமாவின் ஆஸ்கார் நாயகனாகவும் திகழ்ந்து வருபவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். அவர் இசைக்காக ஏங்காத இந்திய ரசிகர்கல் இருக்கவே முடியாது. தனக்கென ஒரு பாணியில் சென்று கொண்டிருக்கும் ரகுமான் ரஜினி படத்தில் இசையமைத்த அனுபவங்களையும் அவரால் ஏற்பட்ட சிக்கல்களை மனம் திறந்து பேசியுள்ளார்.

மற்ற நடிகர்களை போல ரஜினி படத்திற்கு இசையமைப்பது வேறு. ரஜினி படம் மார்ச் மாதம் துவங்கி தீபாவளிக்கு வெளியிடுவார்கள். படப்பிடிப்புகள் முடித்து விட்டு இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் கடையில் தான் என்னிடம் இசையை கேட்பார்கள்.

அந்த நேரத்தில் நான் இரவு பகலாக வேலை செய்யும் சூழ்நிலையில் இருப்பேன். என் வீட்டுப்பகுதியில் மின் வெட்டு அதிகமாக நிகழும் நிலை என்பதால் ஜெனரேட்டர் வைத்து இரவுபகல் என்று பார்க்காமல் வேலை செய்து பிரஷ்ஷரில் இருந்து பணிகளை முடிப்பேன்.

தீபாவளிக்கு கூட மூன்று படங்களில் வேலை செய்வேன் அதனால் என்னால் நிம்மதியாக தீபாவளியை கொண்டாட முடியாத டிப்ரஷனில் இருப்பேன். அதனால் பண்டிகைகள் என்றாலே பிடிக்காமல் போனது என்று கூறியுள்ளார்.