விசுவாசத்தை காட்ட மேடையில் ரஜினியை அவமானப்படுத்திய ஆச்சி!! மனோரமாவை கூனிக்குறுக வைத்த சூப்பர் ஸ்டார்..
சினிமாவிலும் சூப்பர் ஸ்டாராக இல்லாமல் நிஜ வாழ்க்கையில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து தன்னை நிரூபித்து வருபவர் ரஜினிகாந்த். அவர் பற்றி பல நட்சத்திரங்கள் பெருமையாக பேசுவதுண்டு. அப்படி மறைந்த நடிகை ஆச்சி மனோரமா ஒரு சம்பவத்தை பற்றி பகிர்ந்திருக்கிறார். மனோரமாவுக்கு சொந்தமான இடத்தில் ஒரு பள்ளிக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார்.
ஒரு காலத்தில் அந்த இடத்தை காலி செய்யும் படி பள்ளி நிறுவனத்திடம் கூற, எங்களால் முடியாது என்று பிரச்சனை செய்திருக்கிறார்கள். இந்த பிரச்சனையை அப்போது ஆடியில் இருந்து மறைந்த ஜெயலலிதா காதிலுல் போட்டு பிரச்சனையை ஒரு வழியாக முடித்திருக்கிறார். பின் அதற்கு விசுவாசமாக, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மேடைப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் எதிர்க்கட்சியை தாக்குவது போது சில விசயங்களை மனோரமா பேசினார். அதி ரஜினிகாந்தையும் பற்றி அவதூறாக பேசியுள்ளார். அவரீன் அரசியல் நிலைப்பாடு வேறுமாதிரியாக இருப்பதை அவமானப்படுத்தும் வண்ணம் பேசி வந்துள்ளார்.
இது ரஜினிகாந்த் காதுகளுக்கு சென்றதால் சில வாய்ப்பினை இதன்பின் மனோரமா இழந்து வந்துள்ளார். இந்த விசயம் திரைத்துறையினருக்கு பிடிக்காமல் போகவே மனோரமாவை ஒதுக்கி வந்தனர்.
ஆனால் ரஜினிகாந்த், மனோரமாவுக்கு வாய்ப்பில்லாமல் இருப்பதை கேள்விப்பட்டு என் படத்தில் நடிக்க வேண்டும் என்று நேரில் சென்று நடிக்க கேட்டுள்ளார். இதனால் ஆச்சி பெரிய சங்கடத்தில் இருந்துவந்தாராம்.
மேலும், ஒரு பத்திரிக்கையில் மனோரமாவை, அவர் என்னை ஆயிரம் முறை அடித்தாலும் தனக்கு சந்தோஷம் தான் என்று பெருமையாக மனோரமாவை பற்றி கூறியிருக்கிறார். இதனால் மனோரமா கூனிக்குறுகி போய்விட்டாராம்.