நடிகையுடன் 8 வருஷம் ரகசியமா டேட் பண்ணேன்!! நடிகை ஆதி ஓப்பன் டாக்..
ஆதி - நிக்கி
தமிழில் மிருகம், ஈரம், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆதி. ஈரம் பட இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் சப்தம் என்ற படத்தில் நடித்துள்ளார் நடிகர் ஆதி.
இப்படம் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியிருக்கிறது. நடிகை நிக்கி கல்ராணியுடன் ஒருசில படங்களில் ஜோடியாக நடித்த ஆதி, அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி இரு ஆண்டுகளாகிய நிலையில், இருவரும் விவாகரத்து பெறவுள்ளனர் என்று செய்திகள் வரும் போது எனக்கு வலியை கொடுத்தது. ஆனால் ஒருக்கட்டத்தில் அதைப்பற்றி கவலைப்படவில்லை என்று ஆதி கூறியிருந்தார்.
8 ஆண்டுகள் டேட்
இந்நிலையில் வேறொரு பேட்டியொன்றில், நிச்சயத்தார்த்திற்கு ஒருநாள் முன் தான் நாங்கள் காதலிப்பதை அறிவித்தோம். ஆனால், 7, 8 ஆண்டுகள் வெளியில் தெரியாமல், அதிலும் இரு நடிகர்கள் டேட் செய்வது கஷ்டம்.
இடையில் சிலர் காதலிப்பதாக எழுதினார்கள். ஒருவேலை அந்தப்படத்தில் நிக்கி நடிக்காமல் வேறு யாராவது நடித்திருந்தால் என் வாழ்க்கையே மாறியிருக்கும் என்று ஆதி பகிர்ந்துள்ளார்.