ஆதிரை தான் முத்தம் கேட்டா..சிம்பு பாணியில் FJ - ஆதிரை!! மத்தியஸ்தம் செய்த அரோரா..
FJ -ஆதிரை
பிக்பாஸ் சீசன் 9 தற்போது 65 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிரஜன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ஆதிரையை பார்த்து FJ மிரண்டு வருகிறார்.
அந்தவகையில் ஆதிரை, நீ என்னை மிஸ் யூஸ் செய்துவிட்டாய், உன்னை சும்மா விடமாட்டேன் என்று முடிவெடுத்து FJவை அட்டாக் செய்து வருகிறார். இப்படியிருக்கும்போது மத்தியஸ்தம் போட்டி நடந்து வரும் நிலையில், FJ பேசும் போது, ஆதிரை தான் என்னிடம் முத்தம் கேட்டாள்.

என்னிடம் ஒரு பெண் முத்தம் கேட்கும் போது அதுவும் நெருங்கிப்பழகும் ஒரு பெண் முத்தம் கேட்கும்போது அதை லவ் என்றுதானே எனக்கு நினைக்கத்தோன்றும். அப்படித்தான் நான் நினைத்துக்கொண்டேன் என்று FJ கூறினார்.
இதற்கு பதிலளித்த ஆதிரை நான் விக்ரமிடமும் தான் கேஷ்வுலாக ஒரு ஹக் கேட்டேன், அதுபோலத்தான் இந்த முத்தமும். அரோரா உன்னிடம் தலைமுடி மீதுதானே முத்தம் கேட்டால், தோலில் முத்தமிடச்சொல்லி கேட்கவில்லை தானே என்றும் கேள்வி எழுப்பினார் ஆதிரை.
விண்னைத்தாண்டி வருவாயா
இறுதியில் நான் புரிந்து கொண்டது தவறு என FJ மன்னிப்பு கேட்க, இவர்களுக்கிடையில் நடைபெற்றதை ரசிகர்கள் பார்த்து, விண்னைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு, இது லவ் தானே ஜெஸ்ஸி என்பது போல் ஒரு பொண்ணு முத்தம் கேட்டால் அது லவ் தானே என்று FJ நினைத்து கொண்டுவிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் ஆதிரை, FJ ஒருபக்கம் இதுபற்றி பேசிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் தற்போது பரவி வருகிறது.
#FJ ithey #Aadhirai thaan enna kiss panna ketrukka!
— BB Mama (@SriniMama1) December 10, 2025
Hmmmm.. #AuroraSinclair now in between 😑😑#BiggBossTamil9#BiggBoss9Tamil pic.twitter.com/mciNHmb5wE