பிக்பாஸ் கேப்ரில்லாவை காதலிக்கும் சூப்பர் சிங்கர் ஆஜித்.. இதுதான் உண்மை
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் 4 வது சீசனில் பங்கேற்றவர்கள் கேப்ரில்லா மற்றும் ஆஜித்.
பிக்பாஸ் - பிக்ப்பாஸ் ஜோடிகள்
சூப்பர் சிங்கர் பிரபலமாக ஆஜித்தும் ஜோடி நம்பர் 1 மற்றும் வெள்ளித்திரை நடிகையாகவும் திகழ்ந்து வரும் கேப்ரில்லாவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இருவரும் சேர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெருக்கமாக இருந்தது காதல் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பிறகும் இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரொமான்ஸ் டான்ஸ் ஆடினர். பிக்பாஸ் ஜோடிகளுக்கு பின் கேப்ரில்லா சின்னத்திரை சீரியலில் நடித்து ஆஜித் ஒருசில படங்களில் பாடியும் வருகிறார். இருவரும் சேர்ந்து ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்தும் வந்தனர்.
காதல் கிசுகிசு
இதனால் இருவரும் காதலித்து வருகிறார் என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து ஆஜித் கூறியது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் அதிக சண்டைகள் போடுவோம். ஆனால், தொலைக்காட்சியில் அந்த சண்டைகளை காட்டவில்லை. எங்கள் இருவருக்கும் எப்போது காதல் என்பது உண்டாகவில்லை. அப்படி சொல்லப்போனால் இருவரும் அண்ணன் தங்கை போல தான் பழகி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.