காதலித்து ஏமாற்றிய தெலுங்கு நடிகர்!! இப்போ தமிழ் நடிகரின் கட்டுப்பாட்டில் 3 எழுத்து நடிகை...
3 எழுத்து நடிகை
தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் 3 எழுத்து நடிகைக்கு தெலுங்கு நடிகருடன் திருமணம் நடந்துவிட்டதாக இணையத்தில் பலவிதமான போட்டோக்கள் வெளியாகி சர்ச்சையாகி இருக்கிறது.

பிரபல ஒருவர் அளித்த பேட்டியில், 3 எழுத்து நடிகை, தெலுங்கு நடிகரை திருமணம் செய்ட்ஜு கொண்டதாக வெளியாகும் போட்டோக்கள் உண்மை இல்லை. ஏனென்றால் 3 எழுத்து நடிகைக்கும் உயரமான நடிகருக்கும் ஒத்துவராது. அந்த உயரமான நடிஅக்ர் ஏற்கனவே காதலில் தோற்றுப்போனார். வரலாற்று புகழ் பெற்ற படத்தில் தன்னுடன் நடித்த அம்சமான நடிகையுடன் காடலில் இருந்தார்.
இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் திடீரென அந்த காதல் முறிந்துவிட்டது. தற்போதும் அந்த தெலுங்கு நடிகர் முரட்டு சிங்கிளாக இருக்கிறார். இதனால் தான் 3 எழுத்து நடிகையுடன் திருமணம் நடந்துவிட்டதாக வரும் தகவல் உண்மை இல்லை என்கிறேன்.

3 எழுத்து நடிகை சினிமாவில் நடிக்க வந்தபோது பல சர்ச்சைகளில் சிக்கினார். தமிழில் வாய்ப்பு குறைய தெலுங்கு பக்கம் சென்ற போது அங்கு பாரம்பரிமான குடும்பத்தை சேர்ந்த நடிகருடன் பழக்கம் ஏற்பட்டு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்தனர். இதன்பின் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்த்த நேரத்தில், நடிகையை திருமணம் செய்தால் குடும்ப பாரம்பரியம் கெட்டுவிடும் என்று 3 எழுத்து நடிகையை கழட்டிவிட்டுள்ளார்.
தமிழ் நடிகர்
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தெலுங்கு சினிமாவே வேண்டாம் என்று தமிழில் மீண்டும் எண்ட்ரி கொடுத்தார். பல கோடி சம்பளம் வாங்கும் டாப் நடிகருடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார்.

அந்த நடிகர் பல நடிகைகளுடன் பழகி வருவதால் இருவருக்கும் சண்டை வர, ஒரு கட்டத்தில் படப்பிடிப்பில் நடக்கும் இடத்திற்கே சென்று 3 எழுத்து நடிகை, கேரவனில் நடிகருடன் சண்டப்போட்டுள்ளார். அதன்பின் 3 எழுத்து நடிகையை நடிகர் சமாதானப்படுத்தி அடுத்த படத்தில் நீ இருக்கிறார், என்றதோடு தன்னுடைய படத்திலும் நடிக்க வைத்தார்.
மற்றொரு படத்தில் முக்கிய பாடலுக்கு நடனமாடவும் வைத்தார். டாப் நடிகர் 3 எழுத்து நடிகை தன் அருகிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பி இருவரும் சேர்ந்து நட்பை வளர்த்து வருகிறார்கள் என்று பிரபல பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.